- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சதம் அடித்ததும் வித்தியாசமாக கொண்டாடிய கே.எல் ராகுல்.. பாசக்கார தந்தை – நெகிழ்வைத்த சம்பவம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது இங்கு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

வித்தியாசமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கே.எல் ராகுல் :

இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 162 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை குவித்திருந்தது.

- Advertisement -

நேற்றைய ஆட்டநேர முடிவில் கே.எல் ராகுல் 53 ரன்களுடனும், சுப்மன் கில் 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று துவங்கிய இரண்டாம் நாள் ஆட்ட நேரத்தில் சிப்மன் கில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருந்தாலும் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய கே.எல் ராகுல் 190 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகளுடன் தனது 11 வது டெஸ்ட் சாதத்தை பூர்த்தி செய்தார்.

அதிலும் குறிப்பாக கிட்டத்தட்ட 3211 நாட்களுக்கு பிறகு இந்திய மண்ணில் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த அவர் இறுதியில் 197 பந்துகளை சந்தித்து 100 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த கே.எல் ராகுல் அந்த சதத்தை வித்தியாசமாக கொண்டாடிய விதம் தான் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

இப்படி கே.எல் ராகுல் புதிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அண்மையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்த வேளையில் அவரது மகளான இவாராவிற்கு இந்த சதத்தை அர்ப்பணிக்கும் வகையிலேயே இரண்டு விரல்களை வாயில் வைத்து புதுவிதமான செலிப்ரேஷனில் கே.எல் ராகுல் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : தல தோனியின் சாதனையை தகர்த்து டெஸ்ட் போட்டிகளில் அற்புதம் நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 442 ரன்கள் குவித்து 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் நிச்சயம் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதில் வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றியை ருசிக்கும் என்பது உறுதி.

- Advertisement -