தல தோனியின் சாதனையை தகர்த்து டெஸ்ட் போட்டிகளில் அற்புதம் நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

Jadeja and Dhoni
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது போட்டியின் இரண்டாம் நாளான இன்று மிகப்பெரிய முன்னிலையை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றியும் 100 சதவீதம் உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 72 ரன்களை மட்டுமே குவித்தது.

எம்.எஸ் தோனியை பின்னுக்கு தள்ளிய ரவீந்திர ஜடேஜா :

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் குவித்து 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது உறுதி.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரர் கே.எல் ராகுல் 100 ரன்களுடனும், துருவ் ஜுரேல் 125 ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 176 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 104 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியில் அடித்த 5 சிக்ஸர்களின் மூலம் முன்னாள் இந்திய கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார். அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்திய சாதனை யாதெனில் : டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் மகேந்திர சிங் தோனி 78 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்தில் இருந்தார்.

- Advertisement -

ஆனால் இன்றைய போட்டியில் அடித்த 5 சிக்ஸர்களோடு சேர்த்து தற்போது ரவீந்திர ஜடேஜா 80 சிக்ஸர்களுடன் அதிக சிக்சர்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக சேவாக் 91 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : 12 ஆவது இந்திய விக்கெட் கீப்பராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – துருவ் ஜூரேல்

அவருக்கு அடுத்து ரிஷப் பண்ட் 90 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், ரோஹித் சர்மா 88 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கும் வேளையில் தற்போது ரவீந்திர ஜடேஜா 80 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் தோனி ஐந்தாவது இடத்தில் 78 சிக்ஸர்களுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement