12 ஆவது இந்திய விக்கெட் கீப்பராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – துருவ் ஜூரேல்

Dhruv Jurel
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது :

12 ஆவது இந்திய விக்கெட் கீப்பராக துருவ் ஜூரேல் நிகழ்த்திய சாதனை :

தங்களது முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 162 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாளின் மூன்றாவது செஷனான தற்போது வரை 4 விக்கெட்டுகளை இழந்து 407 ரன்கள் குவித்து 245 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரரான கே.எல் ராகுல் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வேளையில் அவருக்கு அடுத்ததாக தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரான துருவ் ஜுரேலும் தற்போது சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக இந்த போட்டியில் 190 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 100 ரன்கள் அடித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் 12 வது இந்திய விக்கெட் கீப்பராக அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சதத்தை அடித்துள்ளார்.

- Advertisement -

அதோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களது முதல் டெஸ்ட் சதசத்தை அடித்த ஐந்தாவது இந்திய விக்கெட் கீப்பராகவும் துருவ் ஜுரேல் மாறியுள்ளார். இதற்கு முன்னதாக விஜய் மஞ்சுரேக்கர், ஃபரூக் இன்ஜினியர், அஜய் ராத்ரா, விருதிமான் சாஹா ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களது முதல் சதத்தை அடித்திருந்தனர்.

இதையும் படிங்க : சுனில் கவாஸ்கரின் 47 ஆண்டுகால சாதனையை கேப்டனாக சமன் செய்த சுப்மன் கில் – விவரம் இதோ

இவ்வேளையில் தற்போது ஐந்தாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மொத்தமாக 210 பந்துகளை சந்தித்த அவர் 15 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement