சுனில் கவாஸ்கரின் 47 ஆண்டுகால சாதனையை கேப்டனாக சமன் செய்த சுப்மன் கில் – விவரம் இதோ

Gill and Gavaskar
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு அவரது தலைமையிலான இந்திய அணியானது இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது.

சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில் :

அனுபவ வீரர்கள் இன்றி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அந்தத் தொடரில் எவ்வாறு செயல்படும்? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.

- Advertisement -

அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாகவும் சரி, பேட்ஸ்மேனாகவும் சரி சுப்மன் கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தார். இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று முடிந்த அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் தற்போது சொந்த மண்ணில் முதல் முறையாக கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

அதன்படி நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்கள் மட்டுமே குவிக்க தற்போது இந்திய அணியானது 350 ரன்கள் கடந்து வலுவான நிலையில் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது நான்காம் இடத்தில் களமிறங்கிய சுப்மன் கில் 100 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தாலும் கவாஸ்கரின் 47 ஆண்டுகால சாதனை ஒன்றினை சமன் செய்து அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய மண்ணில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் சுனில் கவாஸ்கருக்கு அடுத்து கேப்டனாக சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டின் சாதனையை தகர்த்து அசத்திய கே.எல் – விவரம் இதோ

ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்திய வேளையில் தற்போது சொந்த மண்ணிலும் முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்துள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement