மேக்ஸ்வெல்லுக்கு மூட்டை கட்டி அதிரடி புயலை களமிறக்க உள்ள ராகுல் – அதிரடி திட்டம் (விவரம் இதோ)

Rahul
- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக ராகுலையும், பயிற்சியாளராக அனில் கும்ப்ளே முன்வைத்து களமிறங்கியது. மேலும் இந்திய வீரர்களான ராகுல், அகர்வால், ஷமி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் செல்டன் காட்ரெல், மேக்ஸ்வெல், நிக்கலஸ் பூரன் என பலமான அணியுடன் களமிறங்கியது. இதன் காரணமாக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒரு அணியாக பஞ்சாப் அணி அனைவராலும் பார்க்கப்பட்டது.

kxip

- Advertisement -

ஆனால் நடந்து முடிந்த வரை ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பஞ்சாப் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் கடைசி நிலையில் உள்ளது. திறமையான வீரர்கள் இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமல் தவித்து வரும் அந்த அணி இன்று இரவு சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 22 வது லீக் போட்டியில் மோதுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணியில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தின் முக்கியமாக இன்றைய போட்டியில் இருந்து அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் நீக்கப்படுவார் என்று உறுதியாகி உள்ளது. ஏனெனில் இத் தொடர் ஆரம்பம் ஆனதிலிருந்து மேக்ஸ்வெல் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார்.

Maxwell

மேலும் அவர் எப்படியாவது மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று அணி நிர்வாகம் எதிர்பார்த்தது ஆனால் ஐந்து போட்டிகளிலுமே அவர் கடுமையாக சொதப்பினார். இதன் காரணமாக கடந்த ஐந்து போட்டிகளாக அணியில் இடம்பெறாமல் இருந்த அதிரடி துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

Gayle

டி20 போட்டிகளில் மிக அனுபவம் வாய்ந்த அதிரடி வீரரான இவர் இந்த தொடர் ஆரம்பத்திலிருந்தே இறங்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் இப்போட்டியில் இருந்து துவக்க வீரராக ராகுலுடன் களமிறங்குவார். அகர்வால் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுவார் என்று தெரிகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு சீசனில் ராகுலும் கெயிலும் அந்த அணிக்கு அதிரடித் துவக்கத்தை தந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement