IND vs AUS : இந்த போட்டியிலும் சொதப்பலா? இனியும் இவர் அணிக்கு தேவையா? – நொந்துபோன ரசிகர்கள்

KL-Rahul
- Advertisement -

இந்திய அணி சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்த வேளையில் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்று அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடலாவது அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் நடைபெற்று வரும் இந்த தொடரிலும் ராகுலின் ஆட்டம் மோசமாக இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 186 ரன்கள் குவித்தது.

KL Rahul

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கையில் ராகுல் நிச்சயம் அதிரடியான துவக்கம் தருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த போட்டியிலும் நான்கு பந்துகளை சந்தித்த கே.எல் ராகுல் ஒரே ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சமீப காலமாகவே இந்திய அணியில் சரியாக விளையாடாமல் இருந்து வரும் ராகுல் இந்த தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் உலகக் கோப்பை அணிக்கு அவர் தேவையா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மன்கட் பிரச்சனைக்கு ஒரே தீர்வு காண தோனியை பின்பற்ற வேண்டும் – முன்னாள் இங்கி வீரர் சரியான கோரிக்கை

இருப்பினும் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளியப்படுத்திய இந்திய அணியானது 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து இந்த போட்டியில் வெற்றிபெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement