- Advertisement -
ஐ.பி.எல்

196 ரன்ஸ்.. ராஜஸ்தானுக்கு எதிராக க்ளாஸ் காட்டிய கேஎல் ராகுல்.. கிறிஸ் கெயிலை முந்தி அபார சாதனை

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் 44வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணிக்கு குவிண்டன் டீ காக் முதல் ஓவரிலேயே 8 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அப்போது வந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் அடுத்த ஓவரிலேயே சந்திப் சர்மா வேகத்தில் டக் அவுட்டானார். அதனால் 11/2 என தடுமாறிய லக்னோ அணிக்கு மறுபுறம் கேப்டன் கேஎல் ராகுல் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் அடுத்ததாக வந்து ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா அதிரடியாக ரன்கள் குவித்தார். அந்த வகையில் 13 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி லக்னோவை மீட்டெடுத்தது.

- Advertisement -

கேஎல் ராகுல் க்ளாஸ்:
அதில் தீபக் ஹூடா 7 பவுண்டரியுடன் அரை சதமடித்து 50 (31) ரன்களில் அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த நிக்கோலஸ் பூரான் தடுமாற்றமாக விளையாடி 11 ரன்களில் சந்திப் சர்மா வேகத்தில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் 31 பந்துகளில் 50 ரன்கள் அடித்து கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடிய கேப்டன் கேஎல் ராகுல் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 76 (48) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த 76 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக கே.எல் ராகுல் 94 இன்னிங்ஸில் 4000 ரன்கள் கடந்தார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 4000 ரன்கள் அடித்த துவக்க வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அத்துடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக 4000 ரன்கள் அடித்த 5வது துவக்க வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. ஷிகர் தவான்: 6362
2. டேவிட் வார்னர்: 5909
3. கிறிஸ் கெயில்: 4480
4. விராட் கோலி: 4041
5. கேஎல் ராகுல்: 4041*

- Advertisement -

இதையும் படிங்க: பும்ராவின் வீடியோவை பாத்தும் முடியல.. உலகின் மற்ற லீக்கை விட ஐபிஎல் ரொம்ப கஷ்டம்.. ஜேக் பேட்டி

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஆயுஷ் படோனி 18*, க்ருனால் பாண்டியா 15* ரன்கள் அடித்து ஓரளவு நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் லக்னோ 196/5 ரன்கள் எடுத்தது. மறுபுறம் பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் சார்பில் சந்திப் சர்மா 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 1, ஆவேஷ் கான் 1, ட்ரெண்ட் போல்ட் 1 விக்கெட் எடுத்தனர்.

இதையும் படிங்க: பும்ராவின் வீடியோவை பாத்தும் முடியல.. உலகின் மற்ற லீக்கை விட ஐபிஎல் ரொம்ப கஷ்டம்.. ஜேக் பேட்டி

இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி 197 ரன்களை சேசிங் செய்து வருகிறது. குறிப்பாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அந்த அணி இந்த போட்டியிலும் வென்றால் 8வது வெற்றியை பதிவு செய்யும். எனவே இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இப்போதே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் ராஜஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -