விராட், கெயிலையும் மிஞ்சிய கேஎல் ராகுல் 2 புதிய வரலாற்று சாதனை ! ஆனாலும் பயனில்லாமல் லக்னோ வெளியேற்றம்

KL Rahul 103
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 25-ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3 4 ஆகிய இடங்களைப் பிடித்த பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மழையால் தாமதமாக 8.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 207/4 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 0 (1) விராட் கோலி 25 (14) கிளென் மேக்ஸ்வெல் 9 (10) மஹிபால் லோமரர் 14 (9) ஆகிய டாப் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பெரிய ரன்கள் எடுக்காமல் பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

Rajat Patidar 112

- Advertisement -

இருப்பினும் டுப்லஸ்ஸிஸ் கோல்டன் டக் அவுட்டானதும் முதல் ஓவரிலேயே களமிறங்கி நங்கூரத்தை போல சரிந்த பெங்களூருவை தூக்கி நிறுத்திய இளம் வீரர் ரஜத் படிடார் நிதானமாகவும் அதேசமயம் அதிரடியாகவும் பேட்டிங் செய்து லக்னோ பவுலர்களை பிரித்து மேய்ந்தார். கடைசி வரை அவுட்டாகாமல் சரவெடியான பவுண்டரி சிக்சர்களை வெளுத்து வாங்கிய அவர் ஐபிஎல் வரலாற்றில் எலிமினேட்டர் போட்டியில் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனை படைத்து 112* (54) ரன்கள் குவித்தார். அவருடன் தினேஷ் கார்த்திக் தனது பங்கிற்கு 5 பவுண்டரி 1 சிக்சருடன் 37* (23) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

பெங்களூரு மாஸ்:
அதை தொடர்ந்து 208 என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு குவின்டன் டி காக் 6 (5) மன்னன் வோஹ்ரா 19 (11) ஆகியோர் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் 41/2 என தடுமாறிய அந்த அணியை காப்பாற்ற முயன்ற மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவுடன் இணைந்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல நிலைமையை எட்ட வைத்தார். 15 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்த இந்த ஜோடியில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் தீபக் ஹூடா 45 (26) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் 9 (9) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

Mohammed Siraj De Kock

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டபோது 3 பவுண்டரி 5 சிக்சருடன் 79 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் 19-வது ஓவரில் ஆட்டமிழக்க அடுத்து வந்த க்ருனால் பாண்டியா கோல்டன் டக் அவுட்டாகி தோல்வியை உறுதி செய்தார். அதனால் 20 ஓவர்களில் 193/6 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ 14 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்று ஐபிஎல் 2022 தொடரிலிருந்து வெளியேறியது. பெங்களூர் சார்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வாழ்வா – சாவா போட்டியில் அபாரமாக செயல்பட்டு வெற்றியை சுவைத்த பெங்களூரு மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் காத்திருக்கும் ராஜஸ்தானை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

- Advertisement -

ராகுல் பயனில்லா சாதனை:
இந்த வெற்றிக்கு சதமடித்து 112 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய ரஜத் படிதார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே சரிந்த லக்னோவை கேப்டனாக பொறுப்புடன் நங்கூரமாக நின்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 79 ரன்கள் குவித்து போராடிய போதிலும் வெற்றி பெற வைக்க முடியவில்லை. அதனால் அவரின் போராட்டம் வீணானதால் நேற்றைய போட்டியின் முடிவில் சோகத்துடன் காணப்பட்டார்.

Deepak Hooda

இருப்பினும் இந்த 79 ரன்கள் சேர்த்து இந்த வருட ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 616 ரன்களை குவித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக சீசன்களில் 600க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார். இவர் இந்த வருடத்துடன் சேர்த்து 4 முறை 600க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியாவின் புதிய ரன் மெஷினாக உருவெடுத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. கேஎல் ராகுல் : 4 (2018, 2020, 2021,2022*)
2. கிறிஸ் கெயில் : 3 (2011, 2012, 2013)
3. டேவிட் வார்னர் : 3 (2016, 2017, 2019)
4. விராட் கோலி : 2 (2013, 2016)

- Advertisement -

மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக சீசன்களில் தொடர்ச்சியாக 3 முறை மற்றும் அதிக சீசன்களில் 600க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இந்திய கேப்டன் புதிய சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. கேஎல் ராகுல் : 3 (2020, 2021, 2022*)
2. விராட் கோலி : 2 (2013, 2016)
3. சச்சின் டெண்டுல்கர் : 1 (2010)

அத்துடன் பிளே ஆப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அந்தப் பட்டியல் இதோ:
1. கேஎல் ராகுல் : 79, 2022*
2. ரோஹித் சர்மா : 68, டெல்லிக்கு எதிராக, 2020
3. ஷ்ரேயஸ் ஐயர் : 65, மும்பைக்கு எதிராக, 2020

இதையும் படிங்க : பாதியில் வந்து இன்று ஆர்சிபி ஹீரோவாக மாறிய இளம் வீரரின் சூப்பர் கதை – சுவாரசிய தகவல் இதோ

அவரின் இந்த போராட்டம் வீணடைந்ததால் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் தோல்வி அடைந்த போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற பரிதாபத்திற்கும் அவர் உள்ளானார்.

Advertisement