இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்து வருகிறது. இந்நிலையில் 2025-ஆம் ஆண்டுக்கான சீசன் துவங்குவதற்கு முன்னதாக தற்போது அந்த தொடருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டிசம்பர் மாதம் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது.
தோனிக்கான மாற்று வீரர் :
இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்று தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்க இருக்கின்றனர். இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனான தோனி இந்து தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
அதே போன்று அவருக்கு தற்போது 43 வயது ஆகிவிட்டதால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேடும் பணியில் சிஎஸ்கே அணி தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து வெளியேற மாட்டார் என்று அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துவிட்டது. இதன் காரணமாக வேறொரு வீரரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில் லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் கே.எல் ராகுல் ஒருவேளை மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் பட்சத்தில் அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி முனைப்பு காட்டும் என்று தெரிகிறது. ஏனெனில் அதிரடியான பேட்மேனாக இருப்பது மட்டுமின்றி விக்கெட் கீப்பாராகவும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதனால் அந்த முடிவை சிஎஸ்கே அணி எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : அந்த மாதிரி ஒரு இந்திய வீரர் எங்க டீம்ல இருக்கனும்.. அதுதான் என்னோட ஆசை – ஆப்கானிஸ்தான் கேப்டன்
இருப்பினும் சி.எஸ்.கே அணிக்கு எதிராக ஆர்.சி.பி அணியும் கே.எல் ராகுலை எடுக்க போட்டி போடும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது டூப்ளீசிஸ் 40 வயதை தொட்டு விட்டதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுலை கேப்டனாக நியமிக்க பெங்களூரு அணியும் யோசித்து வருவதால் கே.எல் ராகுலை வாங்க இவ்விரு அணிகளும் போட்டி போடும் என்று கூறப்படுகிறது.



