ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது சமீப காலமாகவே மிகப்பெரிய அணிகளை வீழ்த்தி அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரின் போது அரையிறுதி சுற்று வரை ஆப்கானிஸ்தான் அணி முன்னேறி இருந்தது அனைவரது மத்தியில் பாராட்டினை பெற்றிருந்தது. அந்த அளவிற்கு தற்போது ஆப்கானிஸ்தான் அணியானது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
அந்த இந்திய வீரர் எங்களுக்கு வேண்டும்:
ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் தற்போது ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிகளை வீழ்த்தியுள்ளது. ஆனால் இந்திய அணிக்கு எதிராக இன்னும் அவர்கள் ஒரு வெற்றியைக் கூட பெற்றது கிடையாது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்திய வீரர் யாராவது ஒருவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு வேண்டுமென்றால் யாரை எடுப்பீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹஸ்மத்துல்லா கூறுகையில் :
இந்திய அணியில் ஒருவரல்ல பல வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் நான் விராட் கோலியை தான் தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை கடந்து இருக்கிறார். சதம் அடிப்பது குறித்து வாயால் சுலபமாக பேசிவிட முடியும்.
ஆனால் களத்தில் நின்று சதம் அடிப்பது என்பது பெரிய காரியம். அதை விராட் கோலி ஐம்பது முறைக்கு மேல் எளிதாக நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். அவருடைய சாதனைகளே அவர் குறித்த உயரத்தை சொல்லும். இதுவரை விராட் கோலி 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார் என ஆப்கானிஸ்தான் கேப்டன் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க : தனது பேட்டிங் திட்டத்தை ஸ்மித் என்கிட்ட சொன்னாரு.. அது இந்தியாவுக்கு மகிழ்ச்சி.. தீப் தாஸ்குப்தா
அவர் கூறியது போன்று சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதம், 140 அரைசதம் என 27 ஆயிரம் ரன்களுக்கு மேல் கொடுத்துள்ள விராட் கோலி தற்போது வங்கதேச அணிக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.



