ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓராண்டு தடைசெய்யப்படுகிறார்களா ? கே.எல் ராகுல் மற்றும் ரஷீத் கான் – நடந்தது எனன?

banned
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15-வது தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சம் பெற்றுள்ளது. ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய 8 அணிகளோடு சேர்த்து லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு புதிய இரண்டு அணிகள் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கின்றன.

IPL
IPL Cup

இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்கள் ஏலத்தில் விடப்பட இருக்கின்றனர். ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்க வைக்கும் பட்சத்தில் மீதமுள்ள வீரர்கள் அனைவரும் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்வார்கள். இதன்காரணமாக ஏகப்பட்ட வீரர்கள் அணியிட மாற்றம் நடக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

மேலும் இந்த மெகா ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் பஞ்சாப் அணியை சேர்ந்த கேப்டன் ராகுல் மற்றும் சன்ரைசர்ஸ் அணியை சேர்ந்த ரஷீத் கான் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓராண்டு தடை செய்ய வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

banned 1

அதன்படி புதிதாக உருவாகியுள்ள லக்னோ அணி கே எல் ராகுல் மற்றும் ரஷீத் கான் ஆகியோரிடம் அவர்கள் அணியில் இணைய விலை பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அவர்கள் இருவரையும் விதிமுறைக்கு அப்பாற்பட்டு லக்னோ அணி அணுகியதால் சம்பந்தப்பட்ட பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் கிரிக்கெட் வாரியத்திடம் வாய்மொழியாக புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : என்னுடைய டெஸ்ட் ரிட்டயர்மென்ட் எப்போது ? அஷ்வின் அளித்த சுவாரசிய பதில் – வியக்கவைக்கும் தகவல்

அப்படி ஒருவேளை லக்னோ அணி அவர்கள் இருவரிடம் வாய்மொழியில் விலை பேசி இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஓராண்டு தடை விதிக்க பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ராகுலை 20 கோடி ரூபாய்க்கும், ரஷீத் கானை 16 கோடி ரூபாய்க்கும் விலை பேசி உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement