- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் கே.எல் ராகுல் மற்றும் முகமது சிராஜ்.. உறுதியான அறிவிப்பு – விவரம் இதோ

அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) கணக்கில் சமன் செய்து அசத்தியது. அதிலும் குறிப்பாக முதல் நான்கு ஆட்டங்களின் முடிவில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.

இந்திய அணிக்கு திரும்பும் கே.எல் ராகுல் மற்றும் சிராஜ் :

அதன்பின்னர் கடைசியாக நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை வீழ்த்தி அந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது பலரது மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று இருந்தது. அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வெளிப்படுத்திய செயல்பாடு அசத்தலாக இருந்தது.

- Advertisement -

பேட்டிங்கை பொறுத்த வரை இந்திய அணி சார்பாக துவக்க வீரரான கே.எல் ராகுல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 போட்டிகளிலும் சேர்த்து இரண்டு சதங்கள் உட்பட 532 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதேபோன்று பந்துவீச்சில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் திகழ்ந்தார்.

இவர்கள் இருவரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத வேளையில் அடுத்ததாக எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் செப்டம்பர் 23-ஆம் தேதி இந்திய அணியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி ஆஸ்திரேலிய ஏ அணியானது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கு இந்திய ஏ அணிக்கு எதிராக நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இந்த தொடர்பானது செப்டம்பர் 16-ஆம் தேதி துவங்குகிறது.

இதையும் படிங்க : ரோஹித்துக்கு பதில் இப்போவே கில்லை 2027 உ.கோ கேப்டனாக்குங்க.. கோலி இதை செஞ்சாகனும்.. குல்லினன் பேட்டி

இந்த தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும், துணை கேப்டனாக துருவ் ஜுரேலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அணியில் சாய் சுதர்சன், நாராயணன் ஜெகதீசன், தேவ்தத் படிக்கல், நிதீஷ் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -