2025 ஐ.பி.எல் ஆரம்பகட்ட போட்டிகளை தவறவிட இருக்கும் கே.எல் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் – காரணம் என்ன?

Rahul and Mayank
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து வேளையில் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது தொடரானது மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கோலாகலமாக துவங்கவுள்ள இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளை தவறவிட காத்திருக்கும் கே.எல் ராகுல், மாயங்க் யாதவ் :

இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறது. இந்த தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளதால் தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு அணி வீரர்களின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளதால் இந்த தொடரானது ரசிகர் மத்தியில் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல் ராகுலை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

இந்நிலையில் அவர் இந்த தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் ராகுலின் மனைவிக்கு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் துவக்கத்திலேயோ குழந்தை பிறக்க இருப்பதன் காரணமாக அவர் தனது மனைவின் அருகிலேயே இருக்க விரும்புகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார். அதே போன்று லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மாயங்க் யாதவ் 11 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்ட வேளையில் அவரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் இந்த தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார்.

இதையும் படிங்க : ஐ.சி.சி தேர்வுசெய்த 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் தொடருக்கான பெஸ்ட் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

ஏற்கனவே தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் இன்னும் முழுஉடற்தகுதியை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தனிப்பட்ட காரணங்களால் சில வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகி வரும் வேளையில் இந்திய நட்சத்திர வீரர்கள் சிலரும் விளையாட முடியாத சூழலில் உள்ளது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement