ஐ.சி.சி தேர்வுசெய்த 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் தொடருக்கான பெஸ்ட் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Trophy
- Advertisement -

2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற வேளையில் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மாபெரும் இறுதி போட்டியுடன் முடிவுக்கு வந்தது. மொத்தம் எட்டு அணிகளை பங்கேற்ற இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மற்றும் மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பங்கேற்றன.

ஐ.சி.சி தேர்வுசெய்து அறிவித்த பெஸ்ட் பிளேயிங் லெவன் :

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை பற்றி அசத்தியது. கடந்த 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி இருந்த வேளையில் அதற்கு அடுத்து தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 12 ஆண்டுகள் கழித்து இந்த கோப்பையை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியது.

- Advertisement -

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே தோல்வியை சந்திக்காமல் கடந்து வந்த இந்திய அணி இறுதிப் போட்டி வரை எந்த போட்டியிலும் பின்னடைவை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மிகச்சிறந்த பிளேயிங் லெவனை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி தேர்வு செய்துள்ளது.

அந்த வகையில் வெளியான இந்த பிளேயிங் லெவனில் ஆறு இந்திய வீரர்கள், நான்கு நியூசிலாந்து வீரர்கள் மற்றும் இரண்டு ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். மற்றபடி பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளில் ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை. அந்த வகையில் ஐ.சி.சி தேர்வு செய்த பெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

1) ரச்சின் ரவீந்திரா, 2) இப்ராகிம் ஜாத்ரான், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல்.ராகுல், 6) கிளென் பிலிப்ஸ், 7) அஸ்மத்துலா ஒமர்சாய், 8) மிட்செல் சாண்டர் (கேப்டன்), 9) முகமது ஷமி, 10) மேட் ஹென்றி, 11) வருண் சக்ரவர்த்தி.

இதையும் படிங்க : 243 ரன்ஸ்.. நியூஸிலாந்தை பார்த்தாலே அடிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்.. சாம்பியன்ஸ் ட்ராபியில் 19 வருட உலக சாதனை

இந்த பெஸ்ட் பிளேயிங் லெவன் பட்டியலில் 5 இந்திய வீரர்கள் நேரடியாகவும், இந்த அணியின் 12 ஆவது மாற்று வீரராக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement