இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்டிருந்த வேளையில் அவரது செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளித்ததால் அந்த அணி அவரை 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அவரை லக்னோ அணியில் இருந்து வெளியேற்றியிருந்தது. அதனால் அவர் 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார்.
கே.எல் ராகுல் 2025 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் விளையாடாதது ஏன்? :
அப்படி தனது பெயரை பதிவு செய்திருந்த அவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு டெல்லி அணியின் விக்கட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இருந்த ரிஷப் பண்ட் லக்னோ அணியால் வாங்கப்பட்டதால் இந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கே.எல் ராகுல் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று தங்களது முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி லக்னோ அணியை எதிர்த்து விசாகப்பட்டினம் மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டிக்கான டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் கே.எல் ராகுல் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக அபிஷேக் போரல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார்.
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை கே.எல் ராகுல் தவறவிட என்ன காரணம்? என்பது குறித்த கேள்வியும் அதிகரித்தது. இவ்வேளையில் அதற்கான பதிலாக ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே கே.எல் ராகுலின் உறவினர் ஒருவர் கூறுகையில் : கே எல் ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா ஷெட்டிக்கும் விரைவில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவர் தனது மனைவியுடன் இருக்கவே வீடு திரும்பி உள்ளார்.
எனவே நிச்சயம் வெகு விரைவாக அவர் டெல்லி அணிக்கு திரும்புவார் என்று கூறியிருந்தார். இந்த சூழலில் கே.எல் ராகுலின் மனைவியான அதியா ஷெட்டி தனது சமூகவலைதள பக்கத்தில் நேற்று மார்ச் 24-ஆம் தேதி தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சி செய்தினை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : லக்னோ அணியை கதறவிட்ட 20 வயது இளைஞன்.. யார் இந்த விப்ராஜ் நிகம்? – சுவாரசிய தகவல் இதோ
அவர்களுக்கு குழந்தை பிறந்ததால் தான் முதல் போட்டியில் கே.எல் ராகுல் விளையாடவில்லை என்றும் நிச்சயம் இன்னும் ஒரு சில போட்டிகளுக்குள் அவர் டெல்லி அணிக்கு திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது. இப்படி பெண் குழந்தை பிறந்ததை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி தம்பதியினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.



