- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கேஎல் ராகுலை விமர்சிக்காதிங்க, அவர் தன்னுடைய வேலைய சரியாக செய்றாரு – முன்னாள் வீரர் மனசாட்சியற்ற பேச்சு

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை லீக் சுற்றை கடந்து சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியாவின் துணைக் கேப்டனாக விளையாடி வரும் நட்சத்திர தொடக்க வீரர் கேஎல் ராகுல் சுமாராக செயல்படுவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. ஆரம்ப காலங்களில் சுமாராக விளையாடி நிலையான இடத்தை பிடிக்க தடுமாறிய இவர் 2019க்குப்பின் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரையும் மிஞ்சும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு லேட்டஸ்ட் ரன் மெஷினாக அவதரித்து நிரந்தர இடத்தைப் பிடித்தார்.

அதனால் அவரது மதிப்பு ஐபிஎல் தொடரில் 17 கோடி என்ற உச்சபட்சத்தை எட்டியதால் அந்த இடத்தையும் மார்க்கெட்டையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அவர் சமீப காலங்களில் அதற்காக அதிரடியாக விளையாடி அவுட்டாகி விடக்கூடாது என்ற சுயநல எண்ணத்துடன் பெரிய ரன்களைக் குவிக்கும் முயற்சியில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். குறிப்பாக அணி தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் விளையாடும் அவரது உண்மையான முகத்தை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -

சரியாக செய்கிறார்:
வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் சமீப காலங்களில் இந்திய அணியின் “செல்பிஷ் வீரர்” என்றழைக்கும் அளவுக்கு விளையாடும் அவர் சமீபத்தில் சந்தித்த காயத்தால் 2 மாதங்கள் அணியிலிருந்து விலகியிருந்தார். அதிலிருந்து குணமடைந்து ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கிய அவர் 1, 30 என சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

அதைவிட அடித்து துவைக்க வேண்டிய கத்துக்குட்டி ஹாங்காங் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து டெஸ்ட் இனிங்ஸில் விளையாடிய அவரால் இந்தியா 200 ரன்களை தொடும் வாய்ப்பை கோட்டை விட்டது. அதனால் நிறைய ரசிகர்கள் அவரது அணியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் அவர் ஒருபுறம் நிலையாக நின்று பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பதற்காக மெதுவாக விளையாடுவதாக முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பொதுவாகவே பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது ஒருவர் மெதுவாகவும் ஒருவர் அதிரடியாகவும் விளையாடுவது ஒரு யுக்தியாகும். அதில் மெதுவாக விளையாடும் யுக்தியை ராகுல் பின்பற்றுவதாக மனசாட்சியின்றி தெரிவிக்கும் அவர் சமீபத்திய காயம் ராகுலின் ஆட்டத்தை பாதித்துள்ளதால் அதிலிருந்து மீண்டெழுந்து பழைய பார்முக்கு திரும்புவதற்கு முன்பாக யாரும் விமர்சிக்க தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருபுறம் நங்கூரத்தை போடுவதே கேஎல் ராகுலின் வேலையாகும். அதிலும் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி ஆரம்பத்திலிருந்தே எப்படி அதிரடியாக ரன்களைக் குவிக்க வேண்டும் என்பதை தெரிந்திருக்கும் நிலையில் அவருக்கு கம்பெனி கொடுப்பதே ராகுலுடைய வேலையாகும். அந்த வகையில் ரோகித் சர்மா அதிரடியாக ரன்களை குவித்தால் ராகுல் அவருடைய ஆட்டத்தை விளையாடுவார்”

- Advertisement -

“விராட் கோலி கூட அதிரடியான வேகத்தில் ரன்களை குவிக்கிறார். 120 ஸ்டிரைக் ரேட்டில் ஆரம்பம் முதல் விளையாடினால் கடைசி 5 ஓவர்களில் அட்டாக் செய்து கொள்ளலாம் என்பது ராகுலுக்கு தெரியும். எனவே இந்திய அணி ராகுலின் வேலையை டிங்கரிங் செய்ய தேவையில்லை. அது போக சில மாதங்கள் கழித்து ஜிம்பாப்வேயில் விளையாடிய அவரால் பெரிய ரன்களை எடுக்க முடியவில்லை. ஆசிய கோப்பையிலும் முதலிரண்டு போட்டிகளில் பெரிய ரன்களை எடுக்க தவறிய அவர் மெதுவாக விளையாடினார்”

“இது கவலையளிக்கும் அம்சம் என்றாலும் அதற்காக எதையும் ராகுல் மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அவர் மிகச் சிறந்த வீரர். மேலும் அவரை அவ்வாறு விளையாட சொல்லி ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா கூறியிருப்பார்கள். இருப்பினும் வரும் போட்டிகளில் ராகுல் தன்னுடைய அணுகு முறையை மாற்றக் கூடும். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான அவரிடம் அனைத்து திறமையும் உள்ளது. ஆனால் கடந்த உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் அவர் அவுட்டானது போலவே இம்முறையும் அவுட்டாகியுள்ளார்”

இதையும் படிங்க: உண்மையான அதிரடி பாதையில் பயணிக்க ரோஹித் – டிராவிட் கூட்டணி நிகழ்த்த வேண்டிய 4 மாற்றங்கள்

“இருப்பினும் இங்கிலாந்து மண்ணில் சவாலான சூழ்நிலையில் அவர் சிறப்பாக விளையாடி சதமடித்துள்ளார். கடந்த காலங்களில் அபாரமாக விளையாடிய அவர் தற்சமயம் அதை வலுவான அணிகளுக்கு எதிராக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. அவர் பாகிஸ்தானின் ஓபனிங் வேகப்பந்து வீச்சாளர்களிடம் தடுமாறுகிறார்” என்று கூறினார்.

- Advertisement -
Published by