ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

KKR
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 80 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றியை ருசித்தது. அதோடு இந்த தொடரின் புள்ளி பட்டியலிலும் தற்போது இரண்டு வெற்றிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிகழ்த்திய சாதனை :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவிக்க பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 120 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இதன் காரணமாக 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி ஐபிஎல் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையை முதல் அணியாக நிகழ்த்தியுள்ளது. அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி படைத்த சாதனை யாதெனில் : சன் ரைசர்ஸ் அணியை நேற்று வீழ்த்திய கொல்கத்தா அணியானது ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் வரலாற்றில் அவர்களுக்கு எதிராக 20-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே ஆர்.சி.பி அணிக்கு எதிராக 20 வெற்றியையும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக 21 வெற்றிகளையும் பெற்றுள்ள கொல்கத்தா அணி ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெவ்வேறு மூன்று அணிகளுக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட வெற்றிகளை பெற்ற முதல் அணியாக சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த பட்டியலில் மும்பை அணி கொல்கத்தா அணியை 24 முறை வீழ்த்தி ஒரு அணியை அதிக முறை வீழ்த்திய அணியாக முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தோனி மாதிரி யூஸ் பண்ணாம ஆர்சிபி மிஸ் பண்ணிட்டாங்க.. சிராஜ் பதிலடி கொடுத்துட்டாரு.. சேவாக் விமர்சனம்

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கொல்கத்தா அணி இந்த ஆண்டு நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அவருக்கு பதிலாக தற்போது ரஹானே தலைமையில் அவர்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement