தோனி மாதிரி யூஸ் பண்ணாம ஆர்சிபி மிஸ் பண்ணிட்டாங்க.. சிராஜ் பதிலடி கொடுத்துட்டாரு.. சேவாக் விமர்சனம்

Virender Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை குஜராத் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது. அந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த முகமது சிராஜ் பெங்களூரு அணியை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த 7 வருடங்களாக பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் இந்தியாவுக்காகவும் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

அந்த வாய்ப்பில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒரு போட்டியில் விளையாடிய சிராஜ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதற்கு முன் 2023 ஆசியக் கோப்பை ஃபைனலில் இலங்கையை சிதற விட்டு கோப்பையை வெல்ல உதவிய அவர் 2023 உலகக்கோப்பையிலும் சிறப்பாக விளையாடி இந்தியா ஃபைனல் செல்ல உதவினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் முதன்மை பவுலராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

பெங்களூருவின் மிஸ்:

அப்படி இருந்தும் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் சிராஜை கழற்றி விடுவதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். அதற்கு முன்பாகவே தாம் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த பெங்களூரு அணியும் அவரை கழற்றி விட்டது. அந்த சூழ்நிலையில் இத்தொடரில் மும்பைக்கு எதிரானப் போட்டியில் ரோஹித் சர்மாவை அதே புதிய பந்தில் சிராஜ் போல்டாக்கினார்.

அத்துடன் பெங்களூரு அணியும் ஆட்டநாயகன் விருது வென்று தோற்கடித்த அவர் தம்முடைய திறமையை நிரூபித்து விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் தோனியை போல் பயன்படுத்தாமல் சிராஜை கழற்றி விட்டு பெங்களூரு அணி தவறு செய்துள்ளதாக முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் ஒரு அணி உங்களைத் தக்க வைக்கும் என்று எந்த கேரண்டி கிடையாது”

- Advertisement -

தோனி மாதிரி இல்ல:

“இன்று விளையாடும் அவரை குஜராத் அணியே 3 வருடங்கள் கழித்து கழற்றி விடலாம். இதற்கு வீரர்கள் பழகிக் கொள்ள வேண்டும். இன்று சிராஜ் 7 வருடங்கள் விளையாடிய பெங்களூருவுக்கு எதிராக தனது தரத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்தார். அந்த வாய்ப்பில் என்னை கழற்றி விட்ட உங்களுடைய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுக்கிறேன் பாருங்கள் என்ற வகையில் சிராஜ் செயல்பட்டார்”

“சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுக்கப்படாத அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விக்கெட்டை எடுத்தார். எனவே ஆர்சிபி தற்போது சிராஜை தவற விட்டு விட்டோம் என்பதை உணர்வார்கள். அவர்கள் சிராஜை கோட்டை விட்டு ட்ரிக்கை மிஸ் செய்துள்ளனர். ஏனெனில் பவர்பிளே ஓவர்களில் அவரது செயல்பாடுகள் நன்றாக இருக்கிறது. டெத் ஓவர்களில் தான் அவர் தடுமாறியுள்ளார்”

இதையும் படிங்க: சீனியருடன் சண்டை? வாழ்க்கை கொடுத்த மும்பையை விட்டு கோவா அணிக்கு செல்வது ஏன்? ஜெய்ஸ்வால் விளக்கம்

“எடுத்துக்காட்டாக தீபக் சஹரை சென்னை அணியில் தோனி பவர்பிளே ஓவர்களில் அதிகம் பயன்படுத்துவார். ராஜஸ்தானும் டிரண்ட் போல்டை அப்படியே பயன்படுத்தியது. அவர்கள் டெத் ஓவர்களில் பௌலிங் செய்ய மாட்டார்கள். ஆனால் பெங்களூருவின் கேப்டன்கள் அது போல சிராஜை பயன்படுத்தவில்லை. டெத் ஓவர்களில் கமின்ஸ், ஸ்டார்க், பும்ரா, ஷமி போன்ற அனைவருமே ரன்களை கொடுப்பது சகஜமாகும்” என்று கூறினார்.

Advertisement