14 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. கே.கே.ஆர் அணி சந்தித்த மோசமான துவக்கம் – விவரம் இதோ

KKR vs SRH
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

14 ஆண்டுகளில் முதல் சரிவை சந்தித்த கொல்கத்தா அணி :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசன் 52 ரன்களையும், அபிஷேக் சர்மா 48 ரன்களையும் குவித்தனர். பின்னர் 227 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது :

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கட்டுகளையும், இஷான் மலிங்கா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி அடைந்த தோல்வியின் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மோசமான நிலையை கொல்கத்தா அணி சந்தித்துள்ளது. அதாவது மூன்று முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியானது கடந்த 14 ஆண்டுகளில் ஒரு சீசனில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளின் பெஸ்ட் பவுலர் இவர்தான்.. ஜஸ்ப்ரீத் பும்ரா இல்ல – ரஜத் பட்டிதார் தேர்வு

ஆனால் இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி மீண்டும் ஒருமுறை தற்போது சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் ஒரு ஐ.பி.எல் சீசனின் முதல் இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement