அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக கொல்கத்தா அணி தக்கவைக்க இருக்கும் 4 வீரர்கள் இவர்கள் தான் – லிஸ்ட் இதோ

KKR
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எஞ்சியுள்ள தொடரானது செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் 15 வது சீசன் 10 அணிகளுடன் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது.

IPL

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த ஆண்டு அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதன் படி 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரோ அல்லது இரண்டு இந்திய வீரர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் என எப்படி வேண்டுமானாலும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது அணியில் தக்கவைக்க வேண்டிய நான்கு வீரர்கள் குறித்து முடிவு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கொல்கத்தா அணி தக்கவைக்க நினைக்கும் 4 வீரர்கள் இந்த பதிவில் நாம் காணலாம். அதன்படி அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக வெளிநாட்டு வீரர்களான ஆன்ட்ரே ரசல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரை தக்க வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

russell

ஏனெனில் தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவி மோர்கனிடம் சென்றாலும் அடுத்த ஆண்டு மோர்கன் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றே தெரிகிறது. இளம் வீரர்களை வைத்து ஒரு புதுமையான அணியை உருவாக்குவது என்ற முயற்சியின் காரணமாக மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஏலத்திற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

cummins

அதே வேளையில் இரண்டு இந்திய வீரர்களாக வருண் சக்கரவர்த்தி நிச்சயம் தக்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது. மற்றொரு வீரராக சுப்மன் கில் அல்லது நித்திஷ் ராணா இருவரில் ஒருவர் தக்கவைக்க பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Advertisement