எங்க டீமுக்கு வந்தா நீங்கதான் எங்க டீமோட கேப்டன்.. சூர்யகுமார் யாதாவிற்கு ஆபருடன் அழைப்பு விடுத்த – ஐ.பி.எல் அணி

SKY
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை அந்த அணியின் நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

சூர்யகுமாருக்கு வந்துள்ள கேப்டன்சி வாய்ப்பு :

அதோடு அவரது பதவி நீக்கத்தால் அந்த அணியை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் பாதியாக குறைந்தது. அதே போன்று தான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ரோகித் சர்மாவிற்கும் தனிப்பட்ட முறையில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

அதோடு மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள மற்ற முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோரும் பாண்டியாவிற்கு புதிய கேப்டன்சி பதிவை வழங்கியது குறித்து தங்களது ஏமாற்றத்தை சமூக வலைதளத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். இப்படி மும்பை அணிக்குள் விரிசல் ஏற்படும் அளவிற்கு இந்த நியமனம் அமைந்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அவர் மும்பை அணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் அவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகள் போட்டி போடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனால் மெகா ஏலத்திற்கு முன்னதாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்களது அணிக்கு வந்தால் அவருக்கு கேப்டன் பதவி வழங்கும் என்கிற ஆஃபரை சூரியகுமாருக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெகா ஏலத்திற்கு முன்னதாகவே அவர் கொல்கத்தா அணியுடன் இணையம் பட்சத்தில் அவருக்கு கேப்டன்சி வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மும்பை அணியில் இருந்து ரோஹித் சர்மா வெளியேறினால் அவரை வாங்க 2 டீம் 20 கோடியோடு ரெடியா இருக்காங்க – விவரம் இதோ

ஏனெனில் மும்பை அணியில் விளையாடுவதற்கு முன்னதாகவே கொல்கத்தா அணிக்காக ஆரம்ப கட்டத்தில் சூரியகுமார் யாதவ் விளையாடி இருப்பதாலும், கௌதம் கம்பீரின் பலமான ஆதரவையும் அவர் பெற்றுள்ளதால் கொல்கத்தா அணி அவரை கேப்டனாக மாற்ற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சலுகையை ஏற்றுக்கொண்டு அவர் கொல்கத்தா அணிக்கு செல்வாரா? மாட்டாரா? என்பது ஏலத்திற்கு முன்னரே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement