குவாலிபயர் 2 : இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – ஜெயிச்சிடுவாங்க போல

KKR
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஏற்கனவே முதலாவது குவாலிபயர் போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்துள்ளதால் தற்போது மறுவாய்ப்பினை பெற்றுள்ளது.

kkrvsdc

இந்த வாய்ப்பினை அவர்கள் தவறவிடாமல் நிச்சயம் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சொதப்பிய கொல்கத்தா அணி தனது இரண்டாவது பாதியில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று தற்போது பலமான அணியாக மாறி நிற்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் டெல்லி அணியை வீழ்த்தி இம்முறை இறுதிப் போட்டியில் நுழைந்தே தீருவோம் என்ற உறுதியுடன் கொல்கத்தா அணியும் நிற்கிறது. எனவே இந்தப் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இருக்காது எனலாம். டெல்லி அணியை காட்டிலும் தற்போது கொல்கத்தா அணி மிகுந்த பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. ஏனெனில் கொல்கத்தா அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

narine 1

அதுமட்டுமின்றி பேட்டிங்கும் சிறப்பாக உள்ளதால் நிச்சயம் கொல்கத்தா அணி டெல்லி அணியை விட ஒரு படி மேலோங்கி உள்ளது என்றே கூறலாம். இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாட இருக்கும் கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : குவாலிபயர் 2 : இன்றைய போட்டிக்கான டெல்லி அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – பைனலுக்கு போகுமா?

1) சுப்மன் கில், 2) வெங்கடேஷ் ஐயர், 3) ராகுல் த்ரிபாதி, 4) நிதிஷ் ராணா, 5) இயான் மோர்கன், 6) தினேஷ் கார்த்திக், 7) ஷாகிப் அல் ஹசன், 8) சுனில் நரேன், 9) வருண் சக்ரவர்த்தி, 10) பெர்குசன், 11) ஷிவம் மாவி

Advertisement