குவாலிபயர் 2 : இன்றைய போட்டிக்கான டெல்லி அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – பைனலுக்கு போகுமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 14-வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்று சி.எஸ்.கே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் 2-வது குவாலிபயர் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதுகின்றன.

kkrvsdc

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சென்னை அணியை எதிர்த்து விளையாடும் என்பதன் காரணமாக இன்றைய போட்டியில் இரண்டு அணிகளுமே வெற்றியை எதிர்நோக்கி விளையாட காத்திருக்கின்றன.

- Advertisement -

கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட டெல்லி அணியானது இம்முறை நிச்சயம் கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இரண்டு அணிகளையும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இளம் வீரர்கள் கொண்ட டெல்லி அணியானது இன்று கொல்கத்தா அணியை வீழ்த்துமா ? என்பது போட்டியின் முடிவிலேயே தெரியவரும்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் டெல்லி அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பதை நாங்கள் இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் டெல்லி அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : நான் செய்யப்போற இந்த வேலைக்கு ஒரு பைசா வேணாம் – நன்றிக்கடனை செலுத்திய தோனி (பெரிய மனசுதான்)

1) ப்ரித்வி ஷா, 2) ஷிகர் தவான், 3) ரிஷப் பண்ட், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ஹெட்மயர், 6) டாம் கரன், 7) அக்சர் படேல், 8) அஷ்வின், 9) ரபாடா, 10) ஆவேஷ் கான், 11) ஆன்ரிச் நோர்கியா

Advertisement