நான் செய்யப்போற இந்த வேலைக்கு ஒரு பைசா வேணாம் – நன்றிக்கடனை செலுத்திய தோனி (பெரிய மனசுதான்)

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். தோனி திடீரென கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற போது அவர்களது ரசிகர்களிடையே அவரது ஓய்வு முடிவு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் தொடர்ந்து தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி கிரிக்கெட் தொடர்பான பணிகளில் தொடர்ந்து இருப்பேன் என்றும் உறுதி அளித்திருந்தார்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு பின்னர் சில நாட்களில் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வழிகாட்டியாக தோனி செயல்படுகிறார் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும் தோனியும் அதற்கு ஒப்புக்கொண்டார் என்பதனால் ஐபிஎல் தொடர் முடிந்து அவர் அமீரகத்திலேயே இந்திய அணியுடன் இருப்பார் என்று ஏற்கனவே கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது தான் இந்திய அணியின் மெண்டராக செயல்படும் இந்த பதவிக்கு ஒரு பைசா கூட தேவையில்லை என்றும் பிசிசிஐ-டம் தோனி தெரிவித்து விட்டார் என்றும் எனக்கு இந்திய அணியின் வெற்றியே முக்கியம் என்றும் தோனி கூறிவிட்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள கங்குலி கூறுகையில் :

dhoni 1

இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்பட உள்ள தோனி அதற்கான கட்டணம் எதுவும் எனக்கு வேண்டாம் என சொல்லி விட்டார் என்று கங்குலி கூறினார். மேலும் ஜெய்ஷா கூறுகையில் : டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு வழிகாட்டும் தோனி அதற்கான சன்மானம் எனக்கு தேவையில்லை என்று கூறிவிட்டார். அவருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த ஐ.பி.எல் தொடரில் கிடைத்த ஹீரோ இவர்தான். மிகச்சிறந்த வீரர் இவர்தான் – கம்பீர் புகழாரம்

தோனி இந்திய அணி தனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்காக நன்றி கடனை செலுத்தும் விதமாக தற்போது சன்மானத்தை வேண்டாம் என்று மறுத்து உள்ளார். அவருக்கு உண்மையாக கிடைக்க வேண்டிய சன்மானம் யாதெனில் இந்த உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினால் மட்டுமே அவருக்கு அது சன்மானமாக அமையும். நிச்சயம் தோனி கோப்பையை இந்திய வீரர்கள் வெல்ல வேண்டுமென்பது மட்டுமே நினைத்து இந்த பணியை செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement