இந்த ஐ.பி.எல் தொடரில் கிடைத்த ஹீரோ இவர்தான். மிகச்சிறந்த வீரர் இவர்தான் – கம்பீர் புகழாரம்

Gambhir

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு 14-வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் இந்த தொடரானது இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. இந்த தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேவேளையில் எலிமினேட்டர் போட்டியில் விளையாடிய பெங்களூர் அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

RCB

இதன் காரணமாக இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் சென்னை அணியை சேர்ந்த கெய்க்வாட் மற்றும் ஷர்துல் தாகூர், டெல்லி அணியை சேர்ந்த ஆவேஷ் கான் மற்றும் அக்சர் படேல், பெங்களூர் அணியை சேர்ந்த ஹர்ஷல் பட்டேல் மற்றும் சாஹல், கொல்கத்தா அணியை மாவி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த வீரராக தான் கருதும் ஒரு வீரரை தேர்வு செய்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் அது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் கௌதம் கம்பீர் கூறியதாவது :

Harshal

என்னை பொறுத்தவரை இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஒரு வீரராக நான் ஹர்ஷல் பட்டேலை தான் பார்க்கிறேன். ஏனெனில் கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் பந்து வீசியது மிகவும் அருமையாக இருந்தது. மற்ற பவுலர்கள் சொதப்பிய வேளையில் அவர் மட்டும் சிறப்பாக பந்து வீசினார். அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே எப்பொழுது வந்தாலும் விக்கெட்டையும் கைப்பற்றி அணியையும் நல்ல நிலைக்கு அழைத்து வந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் மட்டும் பெங்களூரு அணியின் ஓனரா இருந்தா கோலியை இப்படி செய்ய விட்டிருக்கமாட்டேன் – லாரா ஓபன்டாக்

இந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி பிளேஆப் சுற்று வரை முன்னேற அவரது பந்துவீச்சு உதவியது என்றால் அது மிகை அல்ல. அவர் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என கௌதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் மொத்தம் 15 போட்டிகளில் விளையாடிய ஹர்ஷல் பட்டேல் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement