ஐ.பி.எல் இறுதிப்போட்டி : சென்னை அணியை எதிர்க்கவுள்ள கொல்கத்தா அணியின் – பிளேயிங் லெவன் இதோ

KKR
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது செப்டம்பர் மாதம் மீண்டும் துவங்கிய ஐபிஎல் தொடரானது இரண்டாவது பாதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 59 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

KKRvsCSK

- Advertisement -

இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மொத்த இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் ஆகப்போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னை அணி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பலமாக திரும்பி இருக்கிறது.

அதேவேளையில் இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதியில் சொதப்பிய கொல்கத்தா அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இரண்டாவது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது. இதன் காரணமாக நிச்சயம் சென்னை அணியை வீழ்த்தவும் அவர்கள் தயாராக இருப்பார்கள் என்று தெரிகிறது.

tripathi

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்த பிளேயிங் லெவனை நாங்கள் உங்களுக்காக வழங்கியுள்ளோம். அதன்படி இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் இறுதிப்போட்டி : ரெய்னாவுக்கு இடம் கிடைக்குமா ? சென்னை அணியின் – பிளேயிங் லெவன் இதோ

1) சுப்மன் கில், 2) வெங்கடேஷ் ஐயர், 3) ராகுல் த்ரிப்பாதி, 4) நிதீஷ் ராணா, 5) இயான் மோர்கன், 6) தினேஷ் கார்த்திக், 7) ஆண்ட்ரே ரசல் / ஷாகிப் அல் ஹசன் 8) சுனில் நரேன், 9) ஷிவம் மாவி, 10) பெர்குசன், 11) வருண் சக்ரவர்த்தி

Advertisement