ஐ.பி.எல் இறுதிப்போட்டி : ரெய்னாவுக்கு இடம் கிடைக்குமா ? சென்னை அணியின் – பிளேயிங் லெவன் இதோ

CSK

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி ஏற்கனவே இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று சென்னை அணியுடன் இறுதிப் போட்டியில் இன்று மோத இருக்கிறது. இன்று துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த இறுதிப் போட்டியானது இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்க உள்ளது.

cskvskkr

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இம்முறை கேப்டன் தோனிக்காக கோப்பையை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. அதே வேளையில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை இரண்டாவது பாதியில் இருந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இன்று எந்த அணி ? வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் ? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதன்படி நாங்கள் இன்றைய போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவனை உத்தேசமாக வழங்கியுள்ளோம். கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் பிளேயிங் லெவன் இதோ :

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) டூபிளெஸ்ஸிஸ், 3) ராபின் உத்தப்பா, 4) மொயின் அலி, 5) அம்பத்தி ராயுடு, 6) தோனி, 7) ஜடேஜா, 8) பிராவோ, 9) ஷர்துல் தாகூர், 10) தீபக் சாஹர், 11) ஹேசல்வுட்

- Advertisement -

இன்னும் சுரேஷ் ரெய்னாவிற்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை சி.எஸ்.கே நிர்வாகம் சார்பில் முழுவதுமாக விளக்கப்படவில்லை என்பதன் காரணமாகவும், முதலாவது குவாலிபயர் போட்டியில் உத்தப்பா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாகவும் இன்றைய இறுதிப்போட்டியில் ரெய்னாவிற்கு பதிலாக உத்தப்பாவே விளையாடுவார் என்று தெரிகிறது.

Advertisement