கோலிக்கு ஒரு நியாயம்.. எங்க பிளேயருக்கு ஒரு நியாயமா? ஐபிஎல் நிர்வாகத்தை விளாசும் கொல்கத்தா ரசிகர்கள்

Harshit Rana
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற 3வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முன்னதாக அந்த போட்டியில் கொல்கத்தா அணியின் இளம் வீரர் ஹர்ஷித் ராணா ஹைதராபாத் அணியின் வீரர் மயங் அகர்வால் விக்கெட்டை கொண்டாடிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது விக்கெட்டை எடுத்ததும் அவர் தன்னுடைய கையால் முத்தமிட்டு அதை மயங் அகர்வால் முகத்துக்கு முன்பாக காற்றில் அனுப்பி வைத்து “வெளியே போங்க” என்ற வகையில் கொண்டாடினார். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடிய சீனியர் வீரரான அவரிடம் வெறும் 21 வயதாகும் இளம் வீரரான ராணா அப்படி கொண்டாடி சற்று திமிராக நடந்து கொண்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

நியாயமற்ற தண்டனை:
அதன் காரணமாக அதிருப்தியடைந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் காவாஸ்கர். “இப்படி செய்வதெல்லாம் தேவையற்றது மிஸ்டர் ராணா. பேட்ஸ்மேன் பவுண்டரி அடிக்கும் போது உங்களிடம் இப்படி செய்தாரா? விக்கெட்டை எடுத்தால் அதை உங்களுடைய அணியுடன் கொண்டாடுங்கள். இப்படி எல்லாம் கொண்டாடாமலும் கிரிக்கெட்டை விளையாட முடியும்” என்று ஹர்ஷித் ராணாவை கடுமையாக விமர்சித்தார்.

அதைத் தொடர்ந்து மயங் அகர்வாலிடம் 2 விதிமுறையை மீறி நடந்து கொண்ட ஹர்ஷித் ராணாவுக்கு 60% போட்டி சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. குறிப்பாக மயங் அகர்வாலிடம் அப்படி செய்ததற்காக 50%, கடைசி ஓவரில் ஹென்றிச் க்ளாசென் விக்கெட்டை எடுத்த போதும் அவ்வாறு கொண்டாடியதற்காக 10% என அவருக்கு மொத்தம் 60% அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இளம் சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா அவுட்டாகி சென்ற போது பெங்களூரு வீரர் விராட் கோலி “வெளியே போ போ” என்ற வகையில் சைகை செய்து ஆக்ரோசமாக கொண்டாடி வழி அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு மட்டும் ஐபிஎல் நிர்வாகம் எந்த அபராதமும் எச்சரிக்கையும் கொடுக்காமல் அமைதியாக இருந்தது ஏன்? என்று தற்போது கொல்கத்தா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: அவர் இல்லனா ஜெயிச்சுருக்க முடியாது.. இந்த விருதை அவருக்கு தான் கொடுக்கனும்.. ஆட்டநாயகன் சாம்சன் பேட்டி

அத்துடன் நட்சத்திர வீரர் என்பதால் விராட் கோலிக்கு அபராதம் விதிக்காக ஐபிஎல் நிர்வாகம் தங்களுடைய இளம் வீரருக்கு மட்டும் ஒருதலைப் பட்சமாக நியாயமின்றி தண்டனை கொடுத்துள்ளதாகவும் கொல்கத்தா ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். மொத்தத்தில் விராட் கோலிக்கு ஒரு நியாயம் தங்களுடைய வீரருக்கு ஒரு நியாயம் என்று சமூக வலைதளங்களில் கொல்கத்தா ரசிகர்கள் ஐபிஎல் நிர்வாகம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement