- Advertisement -
ஐ.பி.எல்

5 போட்டியில் ஒன்றில் கூட ஜெயிக்கல.. இதுபத்தாம கொல்கத்தா கேப்டனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் – என்ன நடந்தது?

அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் நிச்சயம் அந்த அணி வலுவான கம்பேக் கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இந்த 2026 ஐபிஎல் தொடரின் ஆரம்பமே அவர்களுக்கு படுமோசமாக அமைந்துள்ளது.

கொல்கத்தா கேப்டன் ரஹானேவிற்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் :

ஏனெனில் இதுவரை அவர்கள் விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் ஒரு ஆட்டம் மழையால் நடைபெறாத வேளையில் மற்ற நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்து மோசமான துவக்கத்தை கண்டுள்ளது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 22-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா அணி இந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவிக்க 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே குவித்ததால் 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியல் கடைசி இடத்தை பிடித்ததோடு சேர்த்து தற்போது அந்த அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானேவிற்கு 12 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : நேற்றைய போட்டி நடைபெற்ற போது முதலாவதாக பந்துவீசிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீசுவதற்கு கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டது. இதன் காரணமாக ஐபிஎல் விதி 2.22 அடிப்படையில் கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானேவிற்கு மட்டும் அணி 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சேப்பாக்கம் சி.எஸ்.கே அணியின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த – தரமான சம்பவம்

இதேபோன்று அடுத்தடுத்த போட்டிகளிலும் இந்த தவறு நடந்தால் அபராத தொகை அதிகரிப்பதோடு மட்டுமின்றி ஒரு போட்டியில் கேப்டனுக்கு விளையாட தடையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் 2024-ஆம் ஆண்டு கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது அவர் வெளியேறிய பின்னர் பெரிய தடுமாற்றத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -