13வது ஓவர் வரை கையில் இருந்த கொல்கத்தா வெற்றி.. ஆர்சிபிக்கு கிடைக்க இதான் காரணம்.. கேப்டன் ரஹானே

Ajinkya Rahane
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் கொல்கத்தாவில் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 175 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக சுனில் நரேன் 44, கேப்டன் ரகானே 56 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூருவுக்கு அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக விளையாடி 59* ரன்கள் எடுத்தார். அவருடன் பில் சால்ட் 56, கேப்டன் ரஜத் படிதார் 34 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

கோட்டை விட்ட கொல்கத்தா:

அதனால் 16.2 ஓவரிலேயே 177-3 ரன்களை எடுத்த பெங்களூரு எளிதாக வெற்றி பெற்று இத்தொடரை வெற்றிகரமாக துவங்கியது. மறுபுறம் கொல்கத்தாவுக்கு வைபவ் ஆராரோ, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் தலா 1 விக்கெட் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் சுனில் நரேனும் தாமும் அதிரடியாக விளையாடியதால் 107/1 என்ற நிலையில் கொல்கத்தா இருந்த போது 200 ரன்கள் தொட முடியும் என்று நினைத்ததாக கேப்டன் ரகானே கூறியுள்ளார்.

ஆனால் அப்போது தாம், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் விக்கெட்டுகளை இழந்தது வெற்றியை ஆர்சிபி பக்கம் கொண்டு சென்றதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் ரசல் உள்ளிட்ட தங்களது அதிரடி பேட்ஸ்மேன்கள் ஃபினிஷிங் செய்ய முயற்சித்தும் நடக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “13வது ஓவர் வரை நாங்கள் வெற்றியை நோக்கி நன்றாக சென்று கொண்டிருந்தோம்”

- Advertisement -

முன்னேற்றம் வேண்டும்:

“ஆனால் அப்போது விழுந்த 2 – 3 விக்கெட்டுகள் வேகத்தை மாற்றியது. எங்களது பேட்ஸ்மேன்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தும் அது வேலை செய்யவில்லை. நானும் வெங்கடேஷ் ஐயரும் பேட்டிங் செய்த போது 200 – 210 ரன்களை அடிக்க முடியும் என்று பேசிக்கொண்டோம். ஆனால் அப்போது விழுந்த விக்கெட்டுகள் போட்டியை மாற்றியது”

இதையும் படிங்க: அங்க கூட விடாத ஆர்சிபி ரசிகர்கள் வெறித்தனமானவங்க.. கொல்கத்தாவை வீழ்த்த இதை செஞ்சேன்.. க்ருனால் பேட்டி

“போதாகுறைக்கு இரவு நேரத்தில் பெங்களூரு பேட்டிங் செய்த போது பனி வந்து விட்டது. அதைப் பயன்படுத்தி அவர்கள் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்தனர். 175 என்ற இலக்கும் சராசரிக்கு நிகரானது. இருப்பினும் நாங்கள் 200 ரன்கள் அடிக்கப் பார்த்தோம். அது நடைபெறாத இந்தப் போட்டியை பற்றி நாங்கள் அதிகம் சிந்திக்கவில்லை. அதே சமயம் இன்று தடுமாறிய இடங்களில் நாங்கள் முன்னேற முயற்சிப்போம்” எனக் கூறினார்.

Advertisement