ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தாவை அதனுடைய சொந்த மண்ணில் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மார்ச் 22ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 175 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரகானே 56, சுனில் நரேன் 44 ரன்கள் எடுத்தனர்.
பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய பெங்களூருவுக்கு பில் சால்ட் அதிரடியாக 56 (31) ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்து விளையாடிய விராட் கோலி தமது பங்கிற்கு 59* (36) ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் கேப்டன் ரஜத் படிதார் 34 (16), லியாம் லிவிங்ஸ்டன் 15* (5) ரன்கள் எடுத்தனர்.
பெங்களூரு வெற்றி:
அதனால் 16.2 ஓவரிலேயே 177-3 ரன்கள் எடுத்த பெங்களூரு எளிதாக வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக துவக்கியுள்ளது. மறுபுறம் 200 ரன்கள் கூட எடுக்காத கொல்கத்தா முதல் போட்டியிலேயே தோற்றது. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய க்ருனால் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் விக்கெட் உட்பட நிறைய பந்துகளை வேகப்பந்து வீச்சாளர்கள் போல் வீசியதாக க்ருனால் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் பெங்களூருவை வெற்றி பெற வைக்க பின்பற்றிய திட்டங்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. ” இது போன்ற பெரிய (கொல்கத்தா) ரசிகர்கள் கூட்டத்திற்கு எதிராக விளையாடும் போது நான் எனது கவனத்தைக் குறைக்க வேண்டும்”
வெறித்தனமான ரசிகர்கள்:
“நல்ல பந்தில் அடி வாங்கினால் என்னால் சிறந்த பந்துகளை எதிர்கொள்ள முடியும். கிரிக்கெட் வளர்ந்து வருவதால் நீங்கள் போகிற போக்கில் முன்னேற வேண்டும். பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சிக்ஸர்கள் அடிப்பதற்கான திறன்களை கொண்டுள்ளனர். எனவே நீங்களும் உங்களது விளையாட்டுக்கு மேலே வந்து வேகமாக பௌலிங் செய்வதற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: வெற்றிக்கு அந்த 2 பேர் காரணம்.. கூடவே கிரேட் விராட் கோலி இருக்கப்போ கவலையில்ல.. படிதார் பேட்டி
“நான் பவுன்சர் வீசப் போகிறேன் என்பதை ஜிதேஷ் (கீப்பர்) அறிவார். ஒய்ட் யார்கர் பந்தை வீசுவதற்கான திறமை இருக்கும் போது அதை ஏன் நீங்கள் பயன்படுத்தக்கூடாது. பெங்களூரு அணிக்குள் நான் வந்த போது அங்கே எவ்வளவு வெறித்தனம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். உள்ளூர் கிரிக்கெட்டில் கூட விடாமல் பெங்களூரு ரசிகர்கள் ஆர்சிபி, ஆர்சிபி என்று முழக்கமிட்டு ஆதரவை கொடுப்பார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களை கொண்ட அணியில் இணைந்து 10 நாளாகிறது. அவர்களுக்காக விளையாடுவது நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.



