கஷ்டமே இல்லாம ரொம்ப சிம்பிளா சன் ரைசர்ஸ் அணியை சுருட்டி தூக்கி போட்ட கொல்கத்தா அணி – நடந்தது என்ன?

KKR vs SRH Tim Southee
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 14-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 61-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புள்ளி பட்டியலில் தலா 10 புள்ளிகளுடன் 7, 8 ஆகிய இடங்களை பிடித்த இவ்விரு அணிகளுக்குமே இந்த போட்டி வாழ்வா – சாவா என்ற போட்டியாக அமைந்த நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து புனேவில் நடைபெற்ற அந்த போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தாவுக்கு இளம் தொடக்க வீரர் வெங்கடேஷ் 7 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

Umran Malik 3

- Advertisement -

அதனால் சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்த ஜோடி சேர்ந்த அஜிங்கிய ரஹானே 28 (24) நிதிஷ் ராணா 26 (16) என அதிரடியாக ரன்களை எடுக்க முயன்ற போதிலும் உம்ரான் மாலிக் வீசிய 8-வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 72/3 என தடுமாறிய கொல்கத்தாவுக்கு அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 15 (9) ரன்களிலும் ரிங்கு சிங் 5 (6) ரன்களிலும் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

அதிரடி ரசல்:
அதனால் 94/5 என்று மீண்டும் திணறிய அந்த அணி 150 ரன்களை தாண்டுமா என எதிர்பார்க்கப்பட்ட போது களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் வழக்கம்போல தனக்கே உரித்தான காட்டடி பாணியில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவருக்கு உறுதுணையாக நின்ற சாம் பில்லிங்ஸ் முக்கியமான 34 (29) ரன்கள் எடுத்து அவுட்டானாலும் மறுபுறம் சுழன்றடித்த ரசல் 3 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்க விட்டு 49* (28) ரன்களை விளாசி மிரட்டல் பினிஷிங் கொடுத்தனர். அதனால் தப்பிய கொல்கத்தா 20 ஓவர்களில் 177/6 ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Andrew Russell49

அதை தொடர்ந்து 178 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா பொறுப்புடன் அதிரடியாக ரன்களை குவிக்க முயன்றாலும் அவருக்கு கை கொடுக்க வேண்டிய மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் வில்லியம்சன் மெதுவாக விளையாடி 9 (17) ரன்களில் அவுட்டானர். அடுத்த சில ஓவர்களில் ராகுல் திரிப்பாதி 9 (12) ரன்களில் அவுட்டானதால் 54/2 என அந்த அணி சுமாரான தொடக்கத்தை பெற்றது.

- Advertisement -

ஹைதெராபாத் தோல்வி:
அந்த தருணத்தில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மாவும் 43 (28) ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரான் 2 (3) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த நேரத்தில் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்ட ஐடன் மார்க்கமும் 3 சிக்சருடன் 32 (25) ரன்களில் ஆட்டமிழந்ததால் 99/5 என சரிந்த ஹைதராபாத் தோல்வி உறுதியானது. அடுத்து வந்த வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்காததால் இறுதிவரை 20 ஓவர்களில் 123/8 ரன்களை மட்டுமே எடுத்து ஹைதராபாத் படுதோல்வியை சந்தித்தது.

Andrew Russell Kane Williamson.jpeg

கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்களை எடுக்க 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அந்த அணி பங்கேற்ற 13 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு புள்ளி பட்டியலில் 6-ஆவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. வாழ்வா – சாவா என அமைந்த இப்போட்டியில் வாழ்வை கண்ட கொல்கத்தாவுக்கு பேட்டிங்கில் 94/5 என தடுமாறியபோது அடித்து தூக்கிய ஆண்ட்ரே ரசல் 49* பொன்னான ரன்களை சேர்த்து பின்னர் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை எடுத்து தனி ஒருவனை போல ஆல்-ரவுண்டராக வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், சுனில் நரைன் வருண் சக்ரவர்த்தி என பந்துவீசிய அனைவருமே குறைந்தது 1 விக்கெட் எடுத்து வெற்றியை மேலும் எளிதாக்கினர்.

கஷ்டம் கொடுக்காத ஹைதெராபாத்:
தற்போதைக்கு தனது கடைசி போட்டியில் கொல்கத்தா வெல்லும் பட்சத்தில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது. மறுபுறம் பந்துவீச்சில் ஆரம்பத்தில் அசத்தலாக செயல்பட்ட ஹைதராபாத் கடைசி நேரத்தில் ரசல் அதிரடியில் வீழ்ந்து தேவையின்றி எக்ஸ்ட்ராவாக 20 – 30 ரன்களை விட்டது.

KKR Shreyas Iyer

இருப்பினும் 178 என்பது துரத்த கூடிய இலக்காக இருக்கும் போது அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ராகுல் திரிபாதி ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கொல்கத்தாவை ரொம்பவும் கஷ்டப்பட விடாமல் எளிதான வெற்றியை பரிசளித்தனர். இதனால் பங்கேற்ற 12 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி பிரகாசமாக இருந்த பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தற்போது 90% குறைத்துக் கொண்டுள்ளது.

Advertisement