RCB vs KKR : சொந்த ஊரில் வள்ளல் பரம்பரையாக வெற்றியை அள்ளிக் கொடுத்த ஆர்சிபி – 2016 முதல் தூசியாக சாய்க்கும் கொல்கத்தா

RCB vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்ற 36வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் பெங்களூருவின் கேப்டனாக மீண்டும் செயல்பட்ட விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு பெயருக்காக 83 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தமிழக வீரர் நாராயண ஜெகதீசன் மெதுவாக செயல்பட்டு 4 பவுண்டரியுடன் 27 (29) ரன்களில் அவுட்டாக அடுத்த சில பந்துகளிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 56 (29) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கி 3வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய கேப்டன் நித்திஷ் ராணா 3 பவுண்டரி 4 சிக்சருடன் 48 (21) ரன்களில் அவுட்டாக அடுத்த சில பந்துகளிலேயே அவருடன் அசத்திய வெங்கடேஷ் ஐயரும் 3 பவுண்டரியுடன் 31 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரிங்கு சிங் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18* (10) ரன்களும் டேவிட் வீஸ் 2 சிக்சருடன் 12* (3) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் கொல்கத்தா 200/5 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

பெங்களூரு சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக வணிந்து ஹசரங்கா மற்றும் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 201 என்ற கடினமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு சரவெடியான பேட்டிங்கை துவங்கிய டு பிளேஸிஸ் 1 பவுண்டரி 2 சிக்சரை விளாசிய போதிலும் 17 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சபாஷ் அகமது 2 (5) கிளன் மேக்ஸ்வெல் 5 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய விராட் கோலியுடன் அடுத்ததாக களமிறங்கி அதிரடி காட்டிய இளம் வீரர் மகிபால் லோம்ரர் 4வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 1 பவுண்டரி 3 சிக்சருடன் 34 (18) ரன்களில் அவுட்டாகி சென்றார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் நங்கூரமாக நின்று வெற்றிக்கு போராடிய விராட் கோலியும் 6 பவுண்டரியுடன் ரசல் வேகத்தில் 54 (37) ரன்களில் ஆட்டமிழந்ததால் பெங்களூரு ரசிகர்கள் கலக்கமடைந்தனர்.

- Advertisement -

அப்போது தினேஷ் கார்த்திக் நம்பிக்கை கொடுத்தாலும் தவறான அழைப்பால் பிரபுதேசாய் அவசரப்பட்டு 10 (9) ரன்களில் ரன் அவுட்டானதால் பெங்களூருவின் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில் 63 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் ஹசரங்கா 5 (4) ரன்களில் அவுட்டானாலும் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் 22 (18) ரன்களில் தாம் வளர்த்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார்.

இறுதியில் டேவிட் வில்லி 11* (10) ரன்களும் விஜய் குமார் 13* (8) ரன்கள் எடுத்தும் 20 அவர்களின் 179/8 ரன்களுக்கு பெங்களூருவை கட்டுப்படுத்தி 21 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கட்டுகளும் ரசல், சுயஸ் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் சாய்த்தனர்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் வழக்கம் போல பேட்டிங்க்கு சாதகமான சிறிய பவுண்டரிகளை கொண்ட சின்னசாமி மைதானத்தில் சிராஜ், ஹஸரங்கா ஆகியோரை தவிர்த்து ஏனைய அனைத்து பெங்களூரு பவுலர்களும் 10க்கும் மேற்பட்ட எக்கானமியில் குறிப்பாக டெத் ஓவர்களில் ரிங்கு சிங், டேவிட் வீஸ் ஆகியோரிடம் எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கினர். அதே போல் சேசிங் செய்யும் போது விராட் கோலி, டு பிளேஸிஸ் ஆகியோரை தவிர மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் போன்ற முக்கிய வீரர்கள் சொதப்பியது பெங்களூருவுக்கு சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் மற்றுமொரு அவமான தோல்வியை பரிசளித்தது.

இதையும் படிங்க: RCB vs KKR : மறுபடியும் ஆர்.சி.பி கேப்டனாக இருப்பது பற்றி டாஸின் போது பேசிய கிங் கோலி – என்ன சொன்னாரு தெரியுமா?

குறிப்பாக இந்த சீசனில் ஏற்கனவே பெங்களூருவை தோற்கடித்திருந்த கொல்கத்தா மீண்டும் 2வது முறையாக இம்முறை அவர்களது சொந்த ஊரில் சிறப்பான வெற்றி கண்டுள்ளது. அதை விட 2016 முதல் சின்னசாமி மைதானத்தில் எதிர்கொண்ட 5 போட்டிகளிலும் ஒன்றில் கூட தோற்காமல் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ள கொல்கத்தா அணி பெங்களூரு அணியை தூசி போல தோற்கடித்து வருகிறது.

Advertisement