லேடிஸ் அன்ட் ஜென்ட்டில்மென்ஸ் இவர்தான் எங்க அணியோட கேப்டன் – கொல்கத்தா நிர்வாகம் அறிவிப்பு

KKR
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலமானது பெங்களூருவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் சில அணிகளுக்கு கேப்டன் பதவிக்கான வீரர்கள் தேவைப்பட்டது. அந்த வகையில் கொல்கத்தா அணியும் கடந்த ஆண்டு தங்கள் அணிக்கு கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் மோர்கன் ஆகியோரை வெளியேற்றியதால் இந்த ஆண்டு புதிய கேப்டனுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் ஏற்கனவே கொல்கத்தா அணியில் சில வீரர்கள் தக்க வைக்கப்பட்டாலும் பல வீரர்கள் இந்த ஏலத்தின் போது தேர்வு செய்யப்பட்டார்கள். அப்படி தேர்வு செய்யப்பட்ட ஒரு வீரர் தான் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர். டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்ட இவர் கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக ரிஷப் பண்ட் கேப்டனாக மாறவே தற்போது டெல்லி அணியில் இருந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணிக்காக 12.25 கோடிக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் அய்யரை தற்போது புதிய கேப்டனாக அறிவித்துள்ள கொல்கத்தா நிர்வாகம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

அதன்படி அவரை கேப்டனாக நியமித்தது குறித்து பேசியுள்ள கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாகி வெங்கி மைசூர் கூறுகையில் : நாங்கள் ஏலத்தில் எடுத்த போதே அவர் எங்கள் அணிக்கு தலைமை தாங்கும் திறமை உடையவர் என்பதை கணித்து எடுத்தோம். அதுமட்டுமின்றி அவர் சர்வதேச அளவில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பதையும் தாண்டி அவரிடம் நிறையவே கேப்டன்சி திறமை இருப்பதனால் அவரை புதிய கேப்டனாக அறிவித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இது குறித்து பேசிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறுகையில் : இந்தியாவின் வருங்கால லீடர்களில் ஒருவரான ஷ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணிக்கு கேப்டனாக மாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. அவரிடம் உள்ள பேட்டிங் திறமை அனைவரும் அறிந்ததே. அதையும் மீறி அவரிடம் கேப்டன்சி திறமையும் இருக்கிறது. நிச்சயம் அவரின் திறமையை கொல்கத்தா அணிக்காக வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இவரை கழற்றிவிட எப்படி மனசு வந்தது? ஐபிஎல் வரலாற்றில் ரெய்னாவின் வியக்க வைக்கும் சாதனைகள் – லிஸ்ட் இதோ

கொல்கத்தா அணியின் நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கொல்கத்தா அணியின் இந்த தேர்வுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement