மீண்டும் அதே தவறை திருப்பி செய்த கொல்கத்தா அணி – மோசமான தோல்வியை சந்திக்க இதுவே காரணம்

KKR
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று நான்காவது முறையாக தோனியின் தலைமையில் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சிஎஸ்கே அணியின் இந்த வெற்றி ரசிகர்களை பெரிதளவு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணியானது இம்முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

CSk

நேற்றைய போட்டியின் போது முதலில் ஆடிய சிஎஸ்கே அணியானது 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவிக்க 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த தொடர் முழுவதும் செய்துவரும் தவறை மீண்டும் ஒருமுறை இந்த இறுதிப் போட்டியில் செய்து கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவியது. அதன்படி நேற்றைய போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தா அணி முதல் 10 ஓவர்கள் வரை சிறப்பான துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

முதல் 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்திருந்த கொல்கத்தா அணியானது 11-வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ஷர்துல் தாகூர் வீசிய அந்த 11-வது ஓவரின் 4-வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களிலும், 6-வது பந்தில் நிதீஷ் ராணா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

Gill-and-Iyer

அதன் பின்னர் சுப்மன் கில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற கொல்கத்தா அணி சரிவை கண்டது. இந்த தொடரின் இரண்டாவது பாதி முழுவதுமே கொல்கத்தா அணியின் பேட்டிங் ஆர்டர் துவக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில்லை மட்டுமே சார்ந்திருந்தது. நேற்றைய போட்டியிலும் அதுவே வெளிப்பட்டது. இந்த இரு துவக்க வீரர்களை தவிர மிடில் ஆர்டரில் யாரும் சரிவர பேட்டிங் செய்வது இல்லை என்பதே உண்மை.

- Advertisement -

Thakur

அதிலும் குறிப்பாக மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோரது பேட்டிங் மிக மோசமாக இருந்தது. நேற்றைய போட்டியில் கூட மிடில் ஆர்டரில் ராணா ரன் எதுவும் எடுக்காமலும், சுனில் நரைன் இரண்டு ரன்களிலும், மோர்கன் 4 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 9 ரன்களிலும், சாகிப் ரன் ஏதும் எடுக்காமலும், த்ரிப்பாதி இரண்டு ரன்களும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். சிறப்பான துவக்கம் கிடைத்தும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்தது.

இதையும் படிங்க : எங்களுக்கு அடுத்து இந்த ஐ.பி.எல் தொடரை வெல்ல தகுதியான ஒரு அணி இவங்கதான் – தோனி பெருந்தன்மை

கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் வீரர்களும் சற்று சமாளித்து விளையாடி இருந்தால் நேற்று சென்னை அணியை அவர்கள் வீழ்த்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் இந்த தொடர் முழுவதுமே கொல்கத்தா அணியில் உள்ள பிரச்சினை அப்பட்டமாக தெரிய வந்துள்ளது. நிச்சயம் மிடில் ஆர்டரில் ஏதாவது ஒரு பேட்ஸ்மென் அரை சதத்தை கடந்து இருந்தால்கூட கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement