எங்களுக்கு அடுத்து இந்த ஐ.பி.எல் தொடரை வெல்ல தகுதியான ஒரு அணி இவங்கதான் – தோனி பெருந்தன்மை

dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பேட்ஸ்மேன்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். அவரை தவிர்த்து கெய்க்வாட் 32 ரன்களும், உத்தப்பா 31 ரன்களும், மொயின் அலி 37 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

faf

- Advertisement -

பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி சிறப்பான துவக்கத்தை பெற்றது. பத்து ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி விளையாடிய கொல்கத்தா அணி 11வது ஓவரின் 4வது பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது. 91 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த கொல்கத்தா அணி அதன் பின்னர் 34 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும், கில் 51 ரன்களும் அடித்தனர்.

அவர்களை தவிர மற்ற எந்த பேர்ட்ஸ்மேனும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தோனி கூறுகையில் : நான் சிஎஸ்கே அணியை பற்றி பேச ஆரம்பிப்பதற்கு முன்னர் கொல்கத்தா அணியை பற்றி பேசிய ஆகவேண்டும்.

kkr

இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மோசமான நிலையில் இருந்த கொல்கத்தா அணி இரண்டாவது பாதியின் போது மீண்டும் இவ்வாறு பலமாக திரும்புவது கடினம் ஆனாலும் அவர்கள் கம்பேக் கொடுத்து சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த ஐபிஎல் தொடரில் எங்களை தவிர்த்து வேறு ஒரு அணி இந்த கோப்பையை கைப்பற்ற தகுதியானது என்றால் நிச்சயம் அது கொல்கத்தா தான் என்று தோனி பெருந்தன்மையுடன் கொல்கத்தா அணி பற்றி பேசினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவதன் மூலம் இமாலய சாதனை படைத்த – தல தோனி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த இடைவெளி எங்களுக்கு உதவியது. மேலும் நாங்கள் சில வீரர்களை மாற்றி வேறு மாதிரி சிந்தித்தோம். எடுத்து சிறுசிறு முடிவுகளும், வீரர்களின் பங்களிப்பும் இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு வெற்றியை கொடுத்தது என தோனி மகிழ்ச்சியுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement