நாங்க விளையாடுன அப்போ இவரை மாதிரி ஒரு வீரர் இல்லை. அவரை விட்றாதீங்க – சையத் கிர்மானி வேண்டுகோள்

Kirmani
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியில் உள்ள வீரர்களை வைத்து பலமான அணியை கட்டமைத்து வருகிறது. அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கும் பலமான அணியை உருவாக்கி வருகிறது. இவ்வேளையில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் தவித்து வரும் விராட் கோலி உலக கோப்பையில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

kohli

- Advertisement -

ஏனெனில் இவ்வளவு மோசமான பேட்டிங் ஃபார்மில் விராட் கோலி இதுவரை இருந்தது கிடையாது. அந்த அளவிற்கு தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டு வரும் கோலி சொற்ப ரன்களில் தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வெளியேறி வருவது அனைத்து தரப்பிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கிவிட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சினையும் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

அந்த அளவிற்கு விராட் கோலியின் பார்ம் கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது. டி20 உலக கோப்பை நெருங்கி வரும் இவ்வேளையில் கோலி இவ்வாறு மோசமாக விளையாடி வருவது அணியில் அவரது இடத்திற்கும் ஆபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விராட் கோலி போன்ற ஒரு வீரரை அணியில் எடுக்காமல் இருப்பது சரியாக இருக்காது என்றும் அவர் மோசமான பார்மில் இருந்தாலும் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர்.

Kohli

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சையது கிர்மானியும் விராட் கோலி குறித்து தனது ஆதரவினை வெளிப்படையாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி போன்ற ஒரு வீரர் 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி வருபவர். கோலி மாதிரி ஒரு வீரரை நாங்கள் விளையாடிய காலத்தில் பார்த்தது கிடையாது. தனது கரியரின் உச்சத்தில் இருந்த கோலி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது மோசமான பார்ம் எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

- Advertisement -

அவர் என்னதான் மோசமான ஃபார்மில் இருந்தாலும் நிச்சயம் டி20 உலக கோப்பையில் அவர் விளையாட வேண்டும். ஏனெனில் அவரைப் போன்ற ஒரு வீரர் மீண்டும் பார்மிற்கு திரும்பும் போது இன்னும் அபாயகரமான வீரராக மாறுவார். நிச்சயம் விராட் கோலியின் அனுபவம் மற்றும் திறன் ஆகியவை அவரை இந்த சரிவிலிருந்து மீட்டெடுத்து மிகச்சிறந்த வீரராக மாற்றும்.

இதையும் படிங்க : IND vs WI : அப்போவே கபில் தேவ் சொன்னாரு, வந்த வாக்கிலேயே காணாமல் போன இளம் வீரர்

இந்த கடினமான சூழ்நிலையில் இருந்து நிச்சயம் கோலி வெளிவந்து சரிந்த தனது பார்மிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு அதனை இளம் வீரர்களுக்கு பாடகமாகவும் கற்பிப்பார் என்பதனால் விராட் கோலி இந்திய அணிக்கு அவசியம் தேவை என்றும் சையத் கிர்மானி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement