IND vs WI : அப்போவே கபில் தேவ் சொன்னாரு, வந்த வாக்கிலேயே காணாமல் போன இளம் வீரர்

Umran-1
- Advertisement -

கிரிக்கெட்டில் நாட்டுக்காக சர்வதேச அரங்கில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளூர் போட்டிகளில் கடினமாக உழைத்து தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்து கடுமையான போராட்டத்திற்கு பின் வாய்ப்பை பெறும் கிரிக்கெட் வீரர்கள் அதில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக பேட்மேன்களைவிட பவுலர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் ரன்களை வாரி வழங்கி மோசமாக செயல்பட்டால் வந்த வாக்கிலேயே காணாமல் போய்விட வேண்டிய நிலைமை ஏற்படும்.

- Advertisement -

அதற்கு சிறந்த உதாரணமாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளம் வீரர் உம்ரான் மாலிக் அமைந்துள்ளார். ஆம் 2021 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் நடராஜன் காயமடைந்ததால் ஒருசில போட்டிகளில் வாய்ப்புகளை பெற்று 140 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக பந்துவீசி அப்போதைய கேப்டன் விராட் கோலி உட்பட அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற இவரை அந்த அணி நிர்வாகம் 4 கோடிக்கு இந்த வருடம் தக்க வைத்தது.

அதனால் இம்முறை முழுமையாக வாய்ப்பு பெற்ற 14 போட்டிகளில் 22 விக்கெட்களை எடுத்த அவர் முன்பை விட இந்த வருடம் தொடர்ச்சியாக 150 கி.மீ மிரட்டல் வேகப்பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை பறக்க விட்டார். குறிப்பாக 157.0 கி.மீ வேகப்பந்தை வீசி அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராகவும் சாதனையும் படைத்தார்.

Kapil-Dev

எச்சரித்த கபில்:
வேகத்திற்கு கைகொடுக்காத இந்திய மைதானங்களிலேயே இப்படி பட்டாசாக பந்துவீசும் இவர் வேகத்திற்கு கைகொடுக்க கூடிய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கண்டிப்பாக மிரட்டுவார் என்ற நோக்கத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவரை தேர்வு செய்ய வேண்டுமென ரவிசாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் வேகத்திற்கு ஈடாக ரன்களையும் வாரி வழங்கிய அவர் 9.03 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசியதால் விவேகமற்ற வேகத்தில் எந்த பயனுமில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில்தேவ் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 2 – 3 வருடங்கள் சிறப்பாக செயல்படாமல் அவரை அவசரப்பட்டு இந்தியாவுக்கு தேர்வு செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

இருப்பினும் இந்திய அணியில் இந்தளவுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசக்கூடியவர் இல்லை என்பதால் இவரை கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் ஏராளமாக எழுந்தன. அதனால் சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தேர்வுகுழு இவரைத் தேர்வு செய்தது. ஆனால் அவரை நேரில் பார்த்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது என்பதுடன் புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர்கள் இருப்பதால் 11 பேர் அணியில் வாய்ப்பளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார்.

Umran Malik Rahul Dravid

வந்த வாக்கிலேயே:
அந்த நிலைமையில் அயர்லாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரில் தற்காலிகமாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா – விவிஎஸ் லக்ஷ்மன் கூட்டணி இவருக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பைக் கொடுத்தது. அதில் ஒரு ஓவர் மட்டுமே வீசி ரன்களை வாரி வழங்கிய அவர் 2-வது போட்டியில் கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெறுவதற்கு காரணமாக இருந்தாலும் 4 ஓவரில் 42 ரன்களை வாரி வழங்கினார். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 3-வது போட்டியில் வாய்ப்பை பெற்ற அவர் 4 ஓவரில் 56 ரன்களை வள்ளலாக வாரி வழங்கி படுமோசமாக பந்து வீசியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

மொத்தத்தில் நல்ல லைன், லென்த், வேரியேஷன் போன்ற விவேகத்தை கற்காமல் வெறும் எக்ஸ்பிரஸ் வேகத்தை மட்டுமே நம்பி பந்துவீசிய அவர் 3 போட்டிகளில் 12.54 என்ற படுமோசமான எக்கனாமியில் பந்து வீசினார். அதன் எதிரொலியாக வெஸ்ட் இண்டீசில் விரைவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக இன்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அவர் வந்த வாக்கிலேயே காணாமல் போயுள்ளார் என்றே கூறலாம்.

Umran Malik

கம்பேக் கொடுப்பாரா:
இதனால் அவசரப்பட்டு வாய்ப்பளித்து விட்டோமோ என்று நிச்சயமாக தேர்வு குழுவினர் வருந்தும் அளவுக்கு சுமாராக செயல்பட்ட உம்ரான் மாலிக் மொத்தமாக காணாமல் போய்விடக் கூடாது என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

- Advertisement -

ஆரம்பத்தில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட தடுமாறுவார்கள் என்ற நிலைமையில் தற்போது மோசமான தொடக்கத்தை பெற்று இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ள இவர் கபில்தேவ் கூறியதைப் போல முதலில் லைன், லென்த் போன்ற முக்கியமான யுக்திகளை கற்றுக் கொண்டு 2 – 3 வருடங்கள் ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் அச்சத்தினால் மீண்டும் தாமாகத் வாய்ப்பு தேடி வரும்.

இதையும் படிங்க : IND vs WI : மீண்டும் அநீதி, காரணமின்றி கழற்றிவிடப்பட்ட இந்திய வீரர் – ரசிகர்கள் கொந்தளிப்பு

ஆனால் அதற்காக கடினமாக உழைத்து விரைவாக யுக்திகளைக் கற்றுக் கொண்டு இந்திய அணிக்குள் கம்பேக் கொடுக்கும் அளவுக்கு மன தைரியமும் திறமையும் அவரிடம் உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement