இவங்க 2 பேர் அணியில் இருந்தாலே எதிரணிகள் பயப்படுகின்றன – இந்திய வீரர்களை புகழ்ந்த கிரண் மோரே

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் நான்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. தற்போது ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியுடன் கோலி நாடு திரும்புவதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் துவங்க முனைப்பு காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

indvsaus

- Advertisement -

இந்திய அணி சார்பாக தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விரைவிலயே தனது விக்கெட்டை இழந்தனர். இதில் பிரித்வி ஷா டக் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து புஜாரா, விராட் கோலி, ரஹானே ஆகியோர் நிதானமாக விளையாடி அணி நிலைமையை ஓரளவிற்கு உயர்த்தினர். விராட் கோலி 74 ரன்கள் குவித்தார்.

தற்போது முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை பெற்றுள்ளது. இதில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் தொடக்க வீரரான ரோகித் சர்மா இல்லாதது குறித்தும் விராட் கோலி முதல் ஆட்டத்துடன் வெளியேறுவது குறித்தும் முன்னாள் வீரர் கிரண் மோர் பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில் :“ ரோகித் சர்மா தனது உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்று தற்போது சிட்னியில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.

Rohith

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்துவது எளிதல்ல. அவர் நிலைத்து விளையாட ஆரம்பித்தால் அவரை தடுத்து நிறுத்துவது கடினம் என்பது நாம் அறிந்ததே. எனவே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக அணியில் இருக்கும்போது அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும்.

kohli

அதுமட்டுமின்றி விராட் கோலி இல்லாத போட்டிகளில் ரோகித் சர்மாவின் பங்கு இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருப்பதையும், இவர் இந்திய அணியில் இருந்தாலே போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும்” முன்னாள் வீரர் கிரண் மோரே சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement