பஞ்சாபி மொழியில் நான் திட்டியதால் என்னை பேட்டால் அடிக்க வந்தார் – பாக் வீரர் குறித்த மோதலை பகிர்ந்த இந்திய வீரர்

Pak
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே எப்போதும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதே போன்று இரு அணிகளுக்கும் இடையே களத்தில் நடக்கும் காரசாரமான மோதல்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே இருப்பது உண்மைதான். இரு அணிகளுமே களத்தில் வெற்றி வெற்றிக்காக கடுமையாக போராடும் அணிகளாக திகழ்கின்றன.

Pak

- Advertisement -

எனவே இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒரு போட்டியாக பார்க்கப்படுகிறது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையே போட்டி நடக்கும் போது இது ஒரு பெரும் விளையாட்டுப்போட்டி மட்டுமல்லாது உணர்வுபூர்வ விஷயமாகவும் பார்க்கப்படும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சீண்டல்கள், மோதல்கள் என அனைத்துக்கும் பஞ்சமே இருக்காது.

அந்த காலத்தில் இருந்து தற்போது வரை இவ்விரு அணிகளுக்கும் இடையே பல மோதல்கள் நடைபெற்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான கிரண் மோரே பாகிஸ்தான் வீரர் உடனான தனது மோதல் குறித்து சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார். 1989 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

More

அந்த தொடரில் கராச்சி டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களின் சலீம் மாலிக்கை நான் பஞ்சாபி மொழியில் மோசமான வார்த்தைகளில் திட்டினேன். பதிலுக்கு அவர் என்னை பேட்டால் அடிக்க வந்தார். பொதுவாக வார்த்தை மொழிகளில் பேசிக்கொள்வது வழக்கம் இரு அணிகளுக்கும் இடையே இருந்தது. ஆனால் அன்று நடந்த சம்பவம் எல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

Gambhir

பொதுவாக இரு அணி வீரர்களும் களத்தில் இவ்வாறு பேசிக் கொள்வதால் இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கத்தான் செய்யும் என்றும் கிரண் மோரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற மோதல்கள் இந்திய அணிக்கு புதிதல்ல ஏனெனில் கம்பீர் உடனான கம்ரன் அக்மல் மோதல் மற்றும் ஷாகித் அப்ரிடி மோதல் ஆகியவற்றை நாம் பார்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement