
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் மிக முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி இன்று நடைபெற இருக்கிறது.
அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த 27-வது லீக் போட்டியானது இன்று கொழும்பு நகரில் இரவு 7:00 மணிக்கு துவங்குகிறது. ஏற்கனவே ஐசிசி தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் மோதி வருவதால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.
அதோடு இந்த போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்த தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிரண் மோரே எதிர்வரும் இந்த லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நிச்சயமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த லீக் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறும். ஏனெனில் அந்த அளவிற்கு இந்திய அணி பலமான அணியாக உள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்குவார்களா? சூரியகுமார் யாதவ் – அளித்த பதில்
எனவே இந்த போட்டியில் இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கும். அதுமட்டுமின்றி இன்றைய போட்டியில் ஹார்திக் பாண்டியாவின் ஆட்டம் ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் ஆல்ரவுண்டரான அவர் ஒரு மேட்ச் வின்னர் எனவே அவர் இதுபோன்ற பெரிய ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சொல்வார் என கிரண் மோரே கூறியது குறிப்பிடத்தக்கது.