டி20 கிரிக்கெட்டில் கெயிலை தொடர்ந்து மாபெரும் சாதனை படைத்த பொல்லார்டு – விவரம் இதோ

Pollard

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான கைரன் பொல்லார்டு கடந்த 2007ஆம் ஆண்டு கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி தற்போது வரை அந்த அணியின் முன்னணி வீரராக இடம்பெற்று விளையாடி வருகிறார். இதுவரை அணிக்காக 119 ஒருநாள் போட்டிகள் மற்றும் 88 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தனது அதிரடியின் மூலம் ஏகப்பட்ட வெற்றிகளை அந்த அணிக்காக பெற்றுத் தந்துள்ளார்.

அதுமட்டுமின்றி 2010ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 171 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் முன்னணி வீரராக விளையாடி வரும் பொல்லார்டு தற்போது டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதன்படி நேற்றைய கரீபியன் லீக் தொடரில் நடைபெற்ற போட்டியில் 41 ரன்கள் குவித்த போது பொல்லார்டு டி20 கிரிக்கெட்டில் 11000 ரன்களை குவித்து சாதனை புரிந்துள்ளார். இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் இதுவரை டி20 போட்டிகளில் 14108 ரன்கள் குவித்து அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

pollard

அவரை தொடர்ந்து சோயப் மாலிக் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் 3-வது மற்றும் 4-வது இடத்தில் இருக்கையில் தற்போது 554 டி20 போட்டிகளில் விளையாடி 11008 ரன்களை குவித்து இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி அவர் டி20 கிரிக்கெட்டில் 297 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

pollard 1

மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆரம்பத்திலிருந்து விளையாடி வரும் பொல்லார்டு 3191 ரன்களை குவித்தது மட்டுமின்றி 63 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement