டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை எனக்கு பிடித்த 5 வீரர்கள் இவர்கள்தான் – கைரன் பொல்லார்டு தேர்வு

Pollard-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கைரன் பொல்லார்டு பற்றி நாம் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவிற்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் சரி, உலக அளவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளிலும் சரி அசைக்கமுடியாத ஒரு வீரராக கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறார். அதிரடி வீரரான அவர் எப்பேர்ப்பட்ட இலக்கையும் சாத்தியமாக்கும் பலம் வாய்ந்தவர். நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் சென்னை அணி 200 ரன்களுக்கு மேல் அடித்த போட்டியை கூட தனி ஒருவராக நின்று மும்பை அணிக்காக வெற்றி பெற்று கொடுத்தவர் பொல்லார்டு என்பது குறிப்பிடத்தக்கது.

pollard 2

- Advertisement -

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விரட்டியும் இவர் சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் தற்போது டி20 கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த 5 வீரர்களை பட்டியலிட்டுள்ள பொல்லார்டு அது குறித்த அவரது கருத்தினை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாகவே கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த வீரர்கள், அணி என்று பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட ஐந்து வீரர்களில் முதலாவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிரிஸ் கெயிலை தேர்வு செய்துள்ளார். 42 வயதாகும் கெயில் இன்றளவும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற மிகப்பெரிய சாதனையை தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Gayle

இரண்டாவதாக லசித் மலிங்காவை தேர்வு செய்துள்ளார். மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக விளையாடியது மட்டுமில்லாமல் உலக அளவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் முன்னணி பவுலராக இடம்பெற்று விளையாடியவர். இதுவரை 295 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 390 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Malinga

மூன்றாவதாக தனது சக நாட்டை சேர்ந்த சுனில் நரேனை தேர்வு செய்துள்ளார். அற்புதமான பந்து வீச்சாளரான சுனில் நரைன் பந்து வீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடி காண்பிக்க கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தில் அவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

narine

நான்காவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தெரிவு செய்துள்ளார். ஐசிசி நடத்திய முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான தோனி சென்னை அணிக்காக மூன்று முறை சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni

இறுதியாக 5 ஆவது வீரராக தன்னையே அவர் தேர்வு செய்து கொண்டார். மேலும் இது குறித்து பேசிய அவர் : நான் தேர்ந்தெடுத்த ஐந்தாவது சிறந்த வீரராக என்னையே அடையாளப்படுத்தி உள்ளேன். நான் எப்பேர்பட்ட வீரர் என்பது வரலாறு பேசும் என பொல்லார்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement