- Advertisement -
உலக கிரிக்கெட்

உலகின் முதல் வீரராக டி20 போட்டிகளில் இமாலய சாதனையை நிகழ்த்திய கைரன் பொல்லார்டு – விவரம் இதோ

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருவதை போன்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் தற்போது டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது மேஜர் லீக் டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் உலகில் உள்ள பல முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமான எம்ஐ நியூயார்க் அணியில் கைரன் பொல்லார்டு விளையாடி வருகிறார்.

உலகின் முதல் வீரராக கைரன் பொல்லார்டு நிகழ்த்திய வரலாற்று சாதனை :

கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தூணாக விளங்கி வந்த அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் உலகெங்கிலும் நடைபெறும் டி20 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று விளையாடி வருகிறார். அந்தவகையில் 38 வயதான அவர் மேஜர் லீக் டி20 தொடரில் எம் ஐ நியூயார்க் அணிக்காக நேற்று சான் பிரான்சிஸ்கோ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

- Advertisement -

அந்த போட்டியில் விளையாடியதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் வீரராக கைரன் பொல்லார்டு மாபெரும் ஒரு வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அப்படி அவர் படைத்த சாதனை யாதெனில் : கடந்த 2008-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமாகிய அவர் சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 111 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

அதனை தவிர்த்து ஐபிஎல் போட்டிகளில் 189 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் தொடர்களில் விளையாடும் அவர் முக்கிய வீரராக தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று சான் பிரான்சிஸ்கோ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் அனைத்து வகையான டி20 கிரிக்கெட் போட்டிகளையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து 700 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் அவருக்கு அடுத்து வெஸ்ட் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ 582 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : தற்போதைய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் ஒரு அப்பா மாதிரி.. வித்தியாசமான கருத்தை கூறிய – மைக்கல் வாகன்

அவருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சோயிப் மாலிக் (557 போட்டிகள்), நான்காவது இடத்தில் ஆண்ட்ரே ரசல் (556 போட்டிகள்), ஐந்தாவது இடத்தில் சுனில் நரேன் (551 போட்டிகள்) ஆகியோர் அடுத்தடுத்த வரிசையில் உள்ளனர். இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் எந்த இந்திய வீரரும் இல்லாத வேளையில் உலகின் முதல் வீரராக 700 டி20 போட்டிகளில் கைரன் பொல்லார்டு விளையாடியுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

- Advertisement -