எவ்ளோ பெரிய பிளேயர் பொல்லார்டு. அவரா இப்படி மோசமான ரெக்கார்ட் வச்சிருக்காரு – நடந்தது என்ன?

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேசிங் செய்த போது 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsWI

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் கூட முழுவதுமாக முடிக்காமல் 43.5 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 5 பேர் 20 ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்வரிசையில் ஜேசன் ஹோல்டர் மட்டும் 71 பந்துகளை சந்தித்து 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் குவித்தார். அவரை தவிர்த்து ஃபேபியன் ஆலன் 29 ரன்களை அடித்தார் .மற்றபடி எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெரிய அளவு ரன்களை குவிக்க வில்லை. அதிலும் குறிப்பாக இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான பொல்லார்ட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

pollard 1

இந்நிலையில் இந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை தேசிய அணிக்காக 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 15 ஆவது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிகமுறை டக் அவுட் ஆனவர்களின் பட்டியலில் தற்போது பொல்லார்டு இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிகமுறை டக் அவுட் ஆன வீரராக கிரிஸ் கெயில் திகழ்கிறார். இதுவரை அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 24 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

இதையும் படிங்க : நான் பேட்டிங் செய்த போது பொல்லார்ட் என்கிட்ட வந்து அந்த ஷாட்டை விளையாட சொன்னாரு – சூரியகுமார் யாதவ்

அவருக்கு அடுத்து 14 முறை டக் 2அவுட் ஆகி பிரைன் லாரா, சிம்மன்ஸ், டுவைன் ஸ்மித் ஆகியோர் இரண்டாவது இடத்தில் இருந்த வேளையில் தற்போது 15 ஆவது முறையாக டக் அவுட்டாகி போல்லார்டு 2-வது இடத்திற்கு சென்று மோசமான சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement