துவண்டு போயி தரையில் அமர்ந்த சூரியகுமார் யாதவ். ஆறுதல் சொன்ன பொல்லார்டு – என்ன நடந்தது?

pollard 1
- Advertisement -

கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாக நடைபெற்று வருவதால் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கினை இத்தொடர் அளித்து வருகிறது. ஆனால் இந்த 15வது சீசனானது ஜாம்பவான் அணியான மும்பை அணிக்கு இதுவரை சரியாக அமையவில்லை. ஏனெனில் ஏற்கனவே முதல் நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்த மும்பை அணி நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் தோல்வியை சந்தித்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

pbks

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவான் அணியான மும்பை அணி இந்த ஆண்டு அந்த அணியில் இருந்து பல முக்கிய வீரர்களை வெளியேற்றியதன் காரணமாக துவக்கத்திலிருந்தே தடுமாறி வருகிறது என்று கூறலாம். அதிலும் குறிப்பாக பாண்டியா பிரதர்ஸ், ட்ரென்ட் போல்ட், டிகாக் போன்ற வீரர்களை அந்த அணி வெளியேற்றியதால் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

ஏற்கனவே நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்த மும்பை அணியானது நேற்று 5-வது ஆட்டத்திலாவது வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 198 ரன்கள் அடிக்க 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவதாக சேசிங் செய்த மும்பை அணியால் 186 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன்காரணமாக 12 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒருமுறை மும்பை அணி தோல்வியை சந்தித்தது.

pollard 2

இந்த போட்டியில் ஒரு கட்டத்தின் போது மும்பை அணி வெற்றி பெறுவது மிக எளிதாகவே இருந்தது. ஏனெனில் கடைசி 4 ஓவர்களுக்கு 49 ரன்கள் தேவைப்பட்ட போது களத்தில் பொல்லார்டு மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இருந்ததனால் நிச்சயம் மும்பை அணி எளிதாக வெற்றி கோட்டை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நிலையில் 17-வது ஓவரின் முதல் பந்தில் சூரியகுமார் யாதவின் தவறான அழைப்பினால் 2 ஆவது ரன்னுக்கு தேவையில்லாமல் ஓடி பொல்லார்டு ரன் அவுட் ஆனது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

இப்படி முக்கியமான வேளையில் தேவையற்ற அழைப்பின் மூலமாக பொல்லார்டை ஆட்டமிழக்க வைத்து விட்டோமே என்று சூரியகுமார் யாதவ் தரையில் உட்கார்ந்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் பொல்லார்டு ஆட்டமிழந்த பிறகு சூரியகுமார் யாதவிடம் வந்து அவரிடம் ஆறுதல் கூறி சில வார்த்தைகளை சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அதோடு ஏற்கனவே திலக் வர்மாவையும் அவர் ரன் அவுட் செய்திருந்தது போட்டியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ் – சூரியகுமார் யாதவ் செய்த 2 தவறுகள்

பொல்லார்டின் இந்த செயலானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனெனில் தான் எதிர்பாராமல் ஆட்டம் இழந்துவிட்டாலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வீரரான சூரியகுமார் யாதவை அவர் ஊக்கப்படுத்தி விட்டு வெளியேறிய செயல் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement