கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ் – சூரியகுமார் யாதவ் செய்த 2 தவறுகள்

Sky
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 23-வது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் பணியானது அகர்வால் மற்றும் தவான் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது.

dhawan

- Advertisement -

கேப்டன் அகர்வால் 52 ரன்களும், ஷிகர் தவான் 70 ரன்களையும் குவித்தனர். அதனைத் தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது துவக்கத்திலேயே இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது விக்கெட்டை பறிகொடுத்தது. இதன் காரணமாக மும்பை அணி 32 ரன்கள் இருக்கும்போதே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரீவிஸ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை அணி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி முன்னேறியது. ஒருகட்டத்தில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணியால் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 186 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. அதன் காரணமாக 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தொடர்ச்சியாக 5 ஆவது தோல்வியை தழுவியது.

pollard

இந்த போட்டியில் மும்பை அணி ஒரு கட்டத்தில் வெற்றிக்கு கிட்டத்தட்ட அருகில் வந்து விட்டது என்றே கூறலாம். ஏனெனில் இறுதி நான்கு ஓவர்களுக்கு 49 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பொல்லார்டு மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் களத்தில் இருந்ததால் மும்பை அணி எளிதாக வெற்றி அடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 16வது ஓவரின் முதல் பந்தில் சூர்யகுமார் யாதவ் பொல்லார்டு ரன் அவுட்டாக காரணமாக அமைந்தார்.

- Advertisement -

அதன்பின்னர் சூரியகுமார் யாதவும் 19-வது ஓவரில் ஆட்டம் இழந்ததால் மும்பை அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக சூர்யகுமார் யாதவ் செய்த 2 தவறுகளே காரணமாக அமைந்தது என்று கூறலாம்.

இதையும் படிங்க : நாடே இங்க திண்டாடுது, உங்களுக்கு ஐபிஎல் கேட்குதா? இலங்கை வீரர்களை விளாசும் முன்னாள் வீரர் (என்ன நடந்தது?)

ஏனெனில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த திலக் வர்மாவின் ரன் அவுட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோன்று முக்கியமான நேரத்தில் பொல்லார்டும் ரன் அவுட் ஆனார். இப்படி திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் என இருவரையும் தேவையில்லாமல் ரன் அவுட் செய்ய காரணமாக சூரியகுமார் யாதவ் அமைந்தார். இவர்கள் இருவரது ரன் அவுட் இந்த போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது மட்டுமின்றி தோல்வியையும் பெற காரணமாக அமைந்தது.

Advertisement