இவர் பிளேயரா இல்ல ஏலியனான்னு டிஎன்ஏ டெஸ்ட் பண்ணுங்க.. இந்திய வீரரை பாராட்டிய வேன் பர்னல்

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய நான்காவது வெற்றியை பதிவு செய்தது. மே 6ஆம் தேதி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் டிராவிஸ் ஹெட் 48, கேப்டன் பட் கமின்ஸ் 35* ரன்கள் எடுத்த உதவியுடன் 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 4, இசான் கிசான் 9, நமன் திர் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் 4வது இடத்தில் களமிறங்கி ஹைதராபாத் பவுலர்களை வெளுத்து வாங்கிய நம்பிக்கை நாயகன் சூரியகுமார் யாதவ் 102* (51) ரன்கள் விளாசினார். அவருடன் திலக் வருமா 37* (32) ரன்கள் எடுத்ததால் 17.2 ஓவரிலேயே மும்பை எளிதாக வென்றது.

- Advertisement -

டிஎன்ஏ டெஸ்ட்:
இதனால் லீக் சுற்றுடன் வெளியேறுவதில் இருந்து மும்பை அணி தற்காலிகமாக தப்பியுள்ளது. இந்த ஆறுதல் வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் கடந்த டிசம்பர் மாதம் சந்தித்த காயத்தால் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாடாதது மும்பைக்கு பின்னடைவாக அமைந்தது.

இருப்பினும் இப்போட்டியில் 31/3 என்று சரிந்து மும்பை தோல்வியின் பிடியில் சிக்கிய போது ஹைதராபாத் பவலர்களை தன்னுடைய ஸ்டைலில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கிய அவர் 12 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதமடித்து வெற்றி பெற வைத்தார். அதனால் மும்பை அணிக்காக அதிக சதங்கள் (2) அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையும் சமன் செய்த அவர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் சூரியகுமார் யாதவ் மனிதர் தானா என்பதை சோதிக்க டிஎன்ஏ டெஸ்ட் எடுக்குமாறு முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் வேன் பர்னல் ட்விட்டரில் வித்தியாசமாக பாராட்டியுள்ளார். ஏனெனில் எப்படி போட்டாலும் வித்தியாசமான ஷாட்டுகளால் அடிக்கும் சூரியகுமார் அட்டகாசமாக விளையாடுவதாக அவர் வியப்புடன் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: இதான் என்னோட ஆசை.. 2024 ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பதிரனா? மெசேஜால் சிஎஸ்கே ரசிகர்கள் கவலை

“யாராவது சூரியகுமார் யாதவ் மீது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துள்ளீர்களா? இந்த பையன் முற்றிலும் வித்தியாசமானவர், வித்தியாசம் உடையவர்” என்று ஏலியன் எமோஜி போட்டு பாராட்டியுள்ளது வைரலாகி வருகிறது. அதே போல மும்பை அணி லீக் சுற்றுடன் வெளியேறினாலும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் சூரியகுமார் தக்க சமயத்தில் ஃபார்முக்கு வந்துள்ளது இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement