- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பழிக்குபழி வேலையாகாது.. இந்தியாவை பகைச்சுகிட்ட அந்த 3 பேரும் வரமாட்டாங்க.. பாகிஸ்தானை எச்சரித்த முன்னாள் சேர்மேன்

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக நடைபெற உள்ளது. வரும் 2025 பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெறும் அந்தத் தொடரில் உலகின் டாப் 8 அணிகள் விளையாட உள்ளன. ஆனால் அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை நிறுத்தியுள்ள இந்தியா 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் நிறுத்தியுள்ளது. இருப்பினும் ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடி வருகிறது. ஆனால் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது.

- Advertisement -

இந்தியாவுடன் மோதாதீங்க:
பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது. அதே போல இம்முறையும் தங்களுடைய சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒருவேளை தாங்கள் நாட்டுக்கு விளையாட வரத் தவறினால் இந்தியாவை ஒதுக்கி வைத்து விட்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவோம் என்று பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பழிக்கு பழி வாங்குகிறோம் என்ற பெயரில் இந்தியாவுடன் மோத வேண்டாம் என பாகிஸ்தான் வாரியத்தை முன்னாள் தலைவர் கலிட் மஹ்மூத் எச்சரித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி பாகிஸ்தான் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானில் விளையாடுவதற்கு இந்தியா சம்மதம் தெரிவிக்க குறைவான வாய்ப்புகளே உள்ளது. பணக்கார வாரியமான இந்தியா பல செல்வாக்கை கொண்டுள்ளது”

- Advertisement -

“அவர்கள் தங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்றால் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளும் இந்தியாவின் பாதையை பின்பற்றும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எனவே இது போன்ற சூழ்நிலையில் மற்ற நாட்டு வாரியங்களின் ஆதரவை பெறுவதற்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள். ஏனெனில் ஐசிசி’யில் இந்தியா மிகப்பெரிய செல்வாக்கை கொண்டுள்ளது”

இதையும் படிங்க: குரு பூர்ணிமா நாளில் தல தோனி பற்றி துஷார் தேஷ்பாண்டே வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு.. சிஎஸ்கே பற்றியும் பேட்டி

“எனவே பழிக்கு பழி தீர்ப்போம் என்ற யுக்தியை பாகிஸ்தான் கடைபிடிப்பது எந்த நன்மையும் செய்யாது. அதே சமயம் தங்களது அணியை அனுப்ப முடியாது என்று தெரிவிக்கும் பிசிசிஐ பாகிஸ்தானுக்கு வெளியே விளையாட விரும்புவதாக கூறுகிறது. அது சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுவதற்கான நோக்கத்தை குறைப்பதாக அமைகிறது” என்று கூறினார்.

- Advertisement -