SRH vs KKR : என் அம்மா கூறிய இந்த வார்த்தையே என்னை சிறப்பாக பந்துவீச வைத்தது – கலீல் அஹமது பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 38 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஐதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், வில்லியம்சன் தலைமை

Khaleel-2
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 38 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஐதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

Dinesh

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது சன் ரைசர்ஸ் அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லின் 51 ரன்களையும், ரின்கு சிங் 30 ரன்களையும் அடித்தனர். இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 160 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ அதிரடியாக ஆட முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவர்களில் 131 ரன்களை சேர்த்தது. பின்பு 15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 161 ரன்களை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் 38 பந்துகளில் 67 ரன்களை அடித்தார். பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 43 பந்தில் 80 ரன்களை அடித்து வெற்றியை உறுதி செய்தார். கலீல் அஹமது ஆட்டநாயகனாக தேர்வானார்.

Khaleel 1

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற கலீல் அஹமது பேசுகையில் : இந்த தருணம் சிறப்பானது, இந்த மைதானம் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. அதனால் முதலில் நான் வீசவேண்டிய வேகத்தையும், திசையையும் கணித்தேன். என் அம்மா என்னிடம் அடிக்கடி ஆட்டநாயகன் விருதினை பெற்று வீட்டிற்கு வா என்று கூறுவார்கள். ஆகையால் நான் இந்த ஆட்டநாயகன் விருதினை என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன். அவர் கூறிய வார்த்தைகளே எனக்கு உத்வேகத்தை தந்தது. மேலும் எனது பந்துவீச்சு திறனை மேம்படுத்த தற்போது எனது உடல் தகுதியினை மேற்படுத்தி வருகிறேன் என்று கூறினார்.

Khaleel

இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய கலீல் அஹமது 33 ரன்களை விட்டுக்கொடுத்து லின், நரேன் மற்றும் கில் என்று கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் மூன்று பேரையும் வீழ்த்தி சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement